சின்னத்திரையில் விறுவிறுப்பாக சென்றுகொண்டிருக்கும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். சினிமா ரேஞ்சுக்கு நகரும் அதன் திரைக்கதையும் அதில் நடிக்கும் நடிகர்களும் தான் அந்த சீரியலின் மவுசுக்கு காரணம். அதிலும் குறிப்பாக ஆதி குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்துவின் நடிப்புக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. இந்நிலையில், எதிர்நீச்சல் தொடரில் ஆதி குணசேகரனாக நடித்துள்ள மாரிமுத்து தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் பற்றியும், தான் கடந்து வந்த பாதை பற்றியும் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி இருக்கிறார்.
தன் மனைவி குறித்து பேசுகையில், 1994-ல் எனக்கு கல்யாணம் நடந்தது. இத்தனை வருஷம் என்னுடன் என் மனைவி குடும்பம் நடத்துவதே சாதனை தான். நான் லவ்லியான கணவர் கிடையாது. சில பேர் மனைவிய குழந்தை மாதிரி பார்த்துக் கொள்வார்கள், பூ வாங்கி கொடுப்பார்கள். ஆனால் நான் அப்படி இல்லை. ஆனால் என் மீது அளவுக்கு மீறிய பாசம் என்பது எப்போதுமே உள்ளது. இவளைவிட வேறுயாராவது நான் கல்யாணம் பண்ணி இருந்தால் நிச்சயம் சினிமாவில் தோற்றிருப்பேன். மனைவி கொடுக்கும் எனர்ஜி தான் கணவனோட வெற்றிக்கு காரணம். என்னுடைய மனைவி கொடுத்த உத்வேகத்தால் தான் நான் இன்று வெற்றியடைந்து இருக்கிறேன்” என தெரிவித்தார்.
அந்த காலத்திலேயே இன்ஜினியரிங் படித்த இவர் சினிமாவில் ஆரம்ப காலகட்டத்தில் தான் சந்தித்த கஷ்டங்கள் குறித்து கூறியதாவது : “நான் ரொம்ப கஷ்டப்பட்ட சமயத்தில் ஹோட்டல்ல வேலை பார்த்தேன். அந்த ஹோட்டல் முன்னாடி இப்போ கார நிப்பாட்டி பார்த்துக்கிட்டே இருப்பேன். என் பசங்களுக்கு அதைக் காட்டி இருக்கேன். எதிர்நீச்சல் சீரியலுக்கு கிடைத்த வரவேற்பால் தற்போது சினிமாவிலும் எனக்கு ஏராளமான பட வாய்ப்புகள் குவிந்து வருகின்றது. அது மகிழ்ச்சி அளிக்கிறது” என கூறினார் மாரிமுத்து.
இதையும் படியுங்கள்... இதுதான் உங்க சமூக பொறுப்பா... சூதாட்ட செயலி விளம்பரத்தால் சிக்கிய சூர்யா - வறுத்தெடுக்கப்படும் கங்குவா நாயகன்