ரஜினிக்கு புடிச்ச சீரியல்... எதிர்நீச்சல் பார்த்துட்டு சூப்பர்ஸ்டார் என்ன சொன்னார்? - மனம்திறந்த திருச்செல்வம்

First Published | Jul 23, 2023, 8:20 PM IST

சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த், தன்னுடைய சீரியலை பார்த்துவிட்டு தன்னை நேரில் அழைத்து பேசிய தருணம் குறித்து எதிர்நீச்சல் இயக்குனர் திருச்செல்வம் பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

ethirneechal

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியல் தான் தற்போது டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு வருகிறது. இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைத்து வயதினரையும் கவரும் வகையில் அமைந்துள்ள இந்த சீரியல் தற்போது வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பாகி வருகிறது. தொலைக்காட்சி வரலாற்றிலேயே வாரத்தின் ஏழு நாட்களும் ஒளிபரப்பான முதல் சீரியல் என்கிற பெருமையையும் எதிர்நீச்சல் பெற்றுள்ளது. இந்த சீரியலை கோலங்கள் தொடரை இயக்கிய திருச்செல்வம் இயக்கி வருகிறார்.

இந்நிலையில், பேட்டி ஒன்றில் ரஜினிகாந்த் உடனான சந்திப்பு குறித்து இயக்குனர் திருச்செல்வம் பேசி உள்ளார். அதில் அவர் கூறியதாவது : “கோலங்கள் தொடர் பண்ணும்போது நான் ரஜினி சாரை முதன்முதலில் சந்தித்தேன். அந்த சீரியலில் ரஜினியின் நண்பர் நட்ராஜ் என்பவர் நடித்திருந்தார். அவர் மூலம் தான் ரஜினி சாரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒருமுறை ரஜினி சாரும், நட்ராஜும் ராகவேந்திரா கோவிலுக்கு போயிருக்காங்க. அப்போ ரஜினியை பார்க்க வந்த ரசிகர்கள் சிலர், உடன் இருந்த நட்ராஜை பார்த்து கோலங்கள் ஆண்டனி என அடையாளம் கண்டு பேசி இருக்கிறார்கள்.

ethirneechal

இதைப்பார்த்து குழம்பிப்போன ரஜினி, என்ன நட்ராஜ் உன்னை ஆண்டனினு கூப்பிடுறாங்கனு கேட்டாராம். அப்போது தான் கோலங்கள் தொடரில் நடிப்பது பற்றி நட்ராஜ் கூறி இருக்கிறார். உடனே நானும் தான் அந்த சீரியல் பாக்குறேன், உன்னை அதில் பார்த்ததில்லையேனு ரஜினி கூறி இருக்கிறார். அந்த நட்ராஜ் தான் என்னைப்பற்றி ரஜினி சாரிடம் சொல்லி இருந்தார். அவர் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன் சார்னு, சொன்னதும் அவரை மீட் பண்ணனும் வரசொல்லுங்கனு ரஜினி சார் சொல்லிவிட்டார்.

2010-ல கோலங்கள் முடிச்ச டைம்ல ராகவேந்திரா மண்டபத்துல மீட் பண்ண வர சொல்லிருந்தாங்க. சரி அங்க எப்படியும் கூட்டமா தான் இருக்கும்னு நெனச்சு நான் போனேன். ஆனா அங்க ஒரு ஆள் இல்லை, சொன்ன டைமுக்கு ரஜினி சாரும் வந்துட்டாரு. அப்படியே வெள்ளை வேட்டி, சட்டை போட்டு நடந்துவந்தார். நான் அப்படியே பிரம்மிச்சு பார்த்துட்டு இருந்தேன்.

இதையும் படியுங்கள்... வெளியானது கங்குவா First Look போஸ்டர்.. சூர்யா பிறந்தநாளில் வெளியான இரண்டாவது ட்ரீட்!

Tap to resize

கொஞ்ச நேரம் அப்டியே என்ன பார்த்துக்கிட்டே இருந்தாரு. அப்புறம் என்ன சார்னு கேட்டது, எப்படினு கேட்டார். ஒரே ஒரு ஆளா 1533 எபிசோடு, அதுவும் அவ்ளோ டீடெய்லானு கேட்டார். நான் இது என்ன சார் பெரிய விஷயம், சீரியல் தான சார்னு சொன்னேன். அதற்கு ரஜினி, நோ... நோ படத்துல நடிக்குறதுலாம் பெரிய விஷயமே கிடையாது. நடிகர்கள் மாதிரி ஒரு சுகவாசி எவனுமே கிடையாது. ஆனா ஒரு சீரியல் டைரக்டரா நல்லா சீன்ஸ் எல்லாம் எடுத்திருக்கீங்க. அதெல்லாம் பெரிய விஷயம்னு சொன்னாரு.

அதேபோல், இனிமா சீரியல் பண்ணாதிங்க, படம் பண்ணுங்கனு சொன்னார். நல்ல கம்பெனிக்கு பண்ணுங்க. இப்போ எதாச்சும் கதை இருக்கானு கேட்டார். அப்போ ஒரு நல்ல அரசியல் கதை ஒன்னு எழுதி வச்சிருந்தேன். நான் அதை சொல்லாம அந்த டைம்ல நான் எழுதிக்கிட்டு இருந்த ஒரு ஸ்டோரிய சொன்னேன். அது ஹீரோயினை மையமாக வைத்து நான் எழுதி வந்த கதை, அதைக் கேட்டுட்டு ரஜினி சார் சிரிச்சாரு. நான் எனக்கு கேட்டா ஹீரோயினுக்கான கதையை சொல்றீங்கனு சொல்லி சிரிச்சார். 

ethirneechal

ஒரு 45 நிமிஷம் அந்த உரையாடல் இருந்தது. இதையடுத்து கிளம்பும் போது நான் பதற்றத்தில் கேட்க மறந்துட்டேன். உடனே ரஜினி சாரே போட்டோ எடுத்துக்கனுமானு கேட்டாரு. அந்த நேரத்துல என்னிடம் சரியான் கேமரா வசதியுடன் கூடிய போன் இல்ல. உடனே ஒரு போட்டோகிராபரை வரச்சொல்லி போட்டோ எடுத்து அன்னைக்கு சாயிங்காலமே என் வீட்டுக்கு பிரேம் போட்டு அனுப்பி வச்சிட்டாரு.

அதன்பின்னர் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கல. ஆனா அண்மையில் ஜெயிலர் படத்தில் எதிர்நீச்சலில் ஆதி குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்துவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் பேசும்போது நீங்க எதிர்நீச்சல் சீரியல்ல நல்லா நடிக்கிறீங்க, எங்க வீட்ல தொடர்ந்து பார்க்குறாங்க. என்னால் தொடர்ந்து பார்க்க முடியாவிட்டாலும் அவ்வப்போது பார்ப்பேன். நல்லா இருக்கு. திருச்செல்வம் தான் இயக்குறாரு, அவர்கிட்ட விசாரிச்சதா சொல்லுங்கனு அவ்ளோ தூரம் என்னை மனதில் வைத்து கேட்டிருக்கிறார்”  என ரஜினி குறித்து நெகிழ்ச்சியுடன் பேசி உள்ளார் திருச்செல்வம்.

இதையும் படியுங்கள்...  சூர்யா பிறந்தநாளுக்கு பேனர் வைத்தபோது மின்சாரம் தாக்கி ரசிகர்கள் இருவர் பலி

Latest Videos

click me!