என்னது குணசேகரனின் மனைவி ஈஸ்வரி தான் ஜீவானந்தத்தின் லவ்வரா? எதிர்நீச்சல் சீரியலில் மிகப்பெரிய டுவிஸ்ட்

First Published | Jul 23, 2023, 10:14 AM IST

எதிர்நீச்சல் தொடரில் தற்போது கலக்கிக் கொண்டிருக்கும் ஜீவானந்தம் யார் என்பது புரியாத புதிராக உள்ள நிலையில், அவரைப்பற்றிய ஒரு முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

ethirneechal

சின்னத்திரையில் சக்கைப்போடு போட்டு வரும் சீரியல் தான் எதிர்நீச்சல். திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீரியல் தான் தற்போது டிஆர்பியில் நம்பர் 1 இடத்தில் உள்ளது. இதற்கு காரணம் இந்த சீரியலின் விறுவிறுப்பான கதைக்களம் தான். சினிமாவுக்கு இணையான கதைக்களத்துடன் கூடிய இந்த சீரியல் பல்வேறு டுவிஸ்ட்களுடன் சென்றுகொண்டிருக்கிறது. 

எதிர்நீச்சல் சீரியல் பார்ப்பவர்களுக்கு புரியாத புதிராக இருக்கும் கேரக்டர் என்றால் அது ஜீவானந்தத்தின் கேரக்டர் தான். குணசேகரனுக்கே அல்வா கொடுத்து அவரின் சொத்தை தன் வசப்படுத்தி இருக்கும் ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்துகொள்ள தா ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கின்றனர். குணசேகரனின் பேக்ட்ரியை கைப்பற்றியுள்ள ஜீவானந்தம், அவரை குண்டுக்கட்டாக தூக்கி வெளியேற்றிய சம்பவம் வேறலெவலில் இருந்தது. 

Tap to resize

ethirneechal

பட்டம்மாவின் சொத்து முழுவதும் தன் பெயரில் வந்துவிடும் என்கிற கனவோடு இருந்த குணசேகரனுக்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் சொத்தை அபகரித்து விட்டார் ஜீவானந்தம். அவர் எதற்காக பட்டம்மாவின் சொத்தை அபகரித்தார்? இதையடுத்து குணசேகரன் என்ன செய்யப்போகிறார்? சொத்து விஷயத்தில் குணசேகரனுக்கு ஜனனி உதவுவாரா? என்கிற பல்வேறு திருப்பங்களுடன் எதிர்நீச்சல் சீரியல் சென்று கொண்டிருக்கிறது.

இதையும் படியுங்கள்... ஏமாத்துறது தப்பில்ல... ஏமாறுறது தான் தப்பு! வைரலாகும் சதீஷின் வித்தைக்காரன் டீசர் இதோ

ethirneechal

இந்த நிலையில், ஜீவானந்தம் யார் என்கிற சுவாரசிய தகவல் தெரியவந்துள்ளது. அதன்படி குணசேகரனின் மனைவியான ஈஸ்வரி, கல்லூரியில் படிக்கும்போது ஒருவரை காதலிப்பார். அந்த நபர் ஒரு சமூக போராளியும் கூட, இவர்களது திருமணத்துக்கு ஈஸ்வரியின் தந்தை சம்மதிக்காததால், வேறுவழியின்றி குணசேகரனுக்கு மனைவியாகிவிடுவார் ஈஸ்வரி.

ethirneechal

தற்போது சீரியலில் எண்ட்ரி கொடுத்திருக்கும் ஜீவானந்தம் தான் ஈஸ்வரியின் காதலனாக இருக்குமோ என்கிற கேள்வி எழுகிறது. ஏனெனில் அவரின் தோற்றம் அந்த காதலனின் தோற்றத்தோடு ஒத்துப் போகிறது. அதுமட்டுமின்றி இவரும் ஒரு சமூக போராளி என தன்னைக் காட்டிக்கொள்கிறார். இந்த விவரம் தெரியாமல் ஜீவானந்தம், குணசேகரனின் ஆளாக இருக்கும் என சந்தேகப்பட்டுக் கொண்டிருக்கிறார் ஈஸ்வரி. அவருக்கு ஜீவானந்தம் யார் என்பது தெரியவரும் காட்சி தான் செம்ம டுவிஸ்ட் ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இதையும் படியுங்கள்... தன்னைத் தானே செதுக்கியவன் ‘சூர்யா’ பர்த்டே ஸ்பெஷல்... கங்குவா நாயகனின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?

Latest Videos

click me!