சன் டிவி தொலைக்காட்சியில், மதிய நேரத்தில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று இலக்கியா. ஹிமா பிந்து கதாநாயகியாக நடிக்கும் இந்த சீரியலில், சித்தி 2 சீரியல் நடிகர் நந்தன் லோகநாதன் ஹீரோவாக நடித்து வருகிறார். விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், முக்கிய கதாபாத்திரத்தில், ரூபாஸ்ரீ, மீனா வேமுறி, சுஷ்மா நாயர், ஜெய் ஸ்ரீனிவாசா, காயத்ரி ப்ரியா உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.