'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியின் வரலாற்றில் இதுவே முதல் முறை! சீசன் 4 டைட்டில் வின்னர் யார்? உறுதியான தகவல்!

First Published | Jul 21, 2023, 8:12 PM IST

ரசிகர்களின் பேவரைட் நிகழ்ச்சிகளில் ஒன்றான 'குக் வித் கோமாளி' சீசன் 4 நிகழ்ச்சியின் ஃபைனலில் வெற்றி பெற்றது யார் என்கிற உறுதியான தகவல் வெளியாகி ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தியுள்ளது.
 

சமையல் நிகழ்ச்சி என்றால், இப்படி தான் இருக்கும் என்கிற பின்பத்தை உடைத்து... அதையே காமெடியாக மாற்றி, ரசிகர்களை சிரிக்க வைக்கவும், சிந்திக்க வைக்கவும் செய்தது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் முதல் சீசனில் வத்தி குச்சு வனிதா வெற்றி பெற்ற நிலையில், இரண்டாவது சீசனில், பிரபல இயக்குனர் அகத்தியன் மகளும் இயக்குனர் திருவின் மனைவியுமான கனி வெற்றிபெற்றார்.

cook with comali

மூன்றாவது சீசனில், பிரபல நடிகர் தேங்காய் சீனிவாசனின் பேத்தியும், நடிகையுமான ஸ்ருதிகா கலந்து கொண்டு, அசத்தி... டைட்டில் பட்டத்தை தட்டி சென்றார். தற்போது இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன், விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், குக் வித் கோமாளி சீசன் 4 இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. 

ரஜினிகாந்த் ஃபவுண்டேஷன் என்ற போலி முகநூல் பக்கத்தில்... வினோத பணமோசடி! காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார்!
 

Tap to resize

இதில் நடிகை விசித்ரா முதல் ஆளாக பைனல்ஸுக்குள் நுழைய, அடுத்ததாக சிவாங்கி, மைம் கோபி, ஸ்ருஷ்டி, கிரண் ஆகியோர் சென்றனர். இதையடுத்து கடந்த வாரம் நடைபெற்ற வைல்டு கார்டு சுற்றில் இதுவரை எலிமினேட் ஆன போட்டியாளர்கள் அனைவரும் போட்டியிட்டனர். இதில் வெளிநாட்டு நடிகையான ஆண்ட்ரியன் வெற்றி பெற்று, ஆறாவது பைனலிஸ்ட் ஆக குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் உள்ளே நுழைந்தார்.
 

இந்நிலையில் நேற்று இந்த குக் வித் கோமாளி சீசன் 4 ஃபைனலுக்கான ஷூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் ஷிவாங்கி அல்லது ஆண்ட்ரியன் ஆகிய இருவரில் ஒருவர் தான் டைட்டில் பட்டத்தை கைப்பற்றுவார்கள் என கூறப்பட்ட நிலையில், யாருமே சற்றும் எதிர்பாராத பிரபலம் ஒருவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறியுள்ளார்.

தனுஷ் முதல்... லோகேஷ் கனகராஜ் வரை அணிந்திருக்கும் கருங்காலி மாலைக்கு இவ்வளவு பவரா? வெற்றியின் சீக்ரெட்!
 

அதாவது மைம் கோபி தான் இந்த முறை குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் டைட்டில் வின்னர் பட்டத்தை தட்டி சென்றுள்ளதாக உறுதியான தகவல்கள் வெளியாகியுள்ளது. இவரை தொடர்ந்து இரண்டாவது இடத்தை சிருஷ்டி டாங்கேவும், மூன்றாவது இடத்தை விசித்ராவும் பிடித்துள்ளார்களாம். ஆனால் அனைவராலும் எதிர்பார்க்கப்பட்ட ஷிவாங்கி மற்றும் ஆண்ட்ரியன் டாப் 3 வின்னர் லிஸ்டில் கூட இடம் பெறாதது ரசிகர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றம் எனலாம்.

அதே போல் குக் வித் கோமாளி நிகழ்ச்சி துவங்கியதில் இருந்து தொடர்ந்து மூன்று சீசன்களிலும் பெண் போட்டியாளர்களே டைட்டில் வின்னராக இருந்த நிலையில், குக் வித் கோமாளி வரலாற்றிலேயே ஆண் போட்டியாளர் ஒருவர், இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக மாறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aneethi Review: வில்லனாக மிரட்டிய அர்ஜுன் தாஸ் ஹீரோவாக ஜெயித்தாரா? அநீதி படத்தின் விமர்சனம்!

Latest Videos

click me!