ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பேமஸ் ஆனது குக் வித் கோமாளி நிகழ்ச்சி. இதுவரை இந்நிகழ்ச்சியின் மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ளன. அதில் முதல் சீசனில் வனிதாவும், இரண்டாவது சீசனில் கனியும், மூன்றாவது சீசனில் ஸ்ருதிகாவும் டைட்டில் வின்னர்களாகினர். தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிகழ்ச்சியும் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளது.
தற்போது பைனல்ஸுக்கான ஷூட்டிங்கும் நடந்து முடிந்துள்ளதாம். அதில் வெற்றி பெற்றவர் யார் என்பதை அறிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு உள்ளதால், அதனை மிகவும் சீக்ரெட் ஆக வைத்துள்ளனர். இருந்தும் பைனல்ஸ் வெற்றியாளர்கள் குறித்த ஹிண்ட் கிடைத்துள்ளது. அதன்படி சிவாங்கி அல்லது ஆண்ட்ரியன் ஆகிய இருவரில் ஒருவர் தான் இந்த சீசனின் வெற்றியாளர் என்பது மட்டும் உறுதியாக கூறப்படுகிறது.
இருவருமே சிறப்பாக சமைப்பவர்கள் என்பதால் இதில் யார் வெற்றியாளராக இருப்பார்கள் என்பது இனி வரும் நாட்களில் தெரியவரும். ஒருவேளை சிவாங்கி வெற்றி பெற்றால், அவரின் நீண்ட நாள் கனவு இதன்மூலம் நிறைவேறிவிடும். ஏனெனில் அவர் இதற்கு முன்னர் சூப்பர் சிங்கர் உள்பட் சில ரியாலிட்டி ஷோக்களில் கலந்துகொண்டிருக்கிறார். ஆனால் அதில் வெற்றிபெற்றதில்லை. இதில் வெற்றிபெற்றால் தன் கனவு நனவாகிவிடும் என முந்தைய எபிசோடில் அவர் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... அவதூறு வழக்கில் கைதான கனல் கண்ணன் ஜாமினில் விடுவிப்பு... நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள் என்னென்ன?