TRP-யில் படுமோசம்.. புதிய சீரியல்கள் வரவால் அதிரடியாக முடிவுக்கு வரும் ரசிகர்களின் ஃபேவரட் விஜய் டிவி தொடர்!

First Published | Jul 15, 2023, 12:26 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாவது பாகம் விரைவில் நிறைவடைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகி வரும், சூப்பர் ஹிட் சீரியலின் இரண்டாவது பாகம் விரைவில் நிறைவடைய உள்ளதாக வெளியாகி உள்ள தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
 

சமீப காலமாக விஜய் டிவி சீரியல் தொடர்கள் TRP டாப் 10 லிஸ்டில் இடம்பிடிக்க போராடி வருகிறது. சன் டிவி தொடர்கள் மட்டுமே டாப் 5 லிஸ்டில் இடம்பிடித்து வரும் நிலையில், பாண்டியன் ஸ்டோர், பாக்கிய லட்சுமி, சிறகடிக்க ஆசை போன்ற தொடர்கள் டாப் 10 லிஸ்டில் உள்ளது.

'மாமன்னன்' படத்தில் வடிவேலு நடித்திருந்த கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா?
 

Tap to resize

விஜய் டிவியில் புதிய தொடர்கள் அடுத்தடுத்து ஒளிபரப்பாக உள்ள நிலையில், முக்கிய சீரியல் ஒன்று முடிவுக்கு வர உள்ளதாக தற்போது வெளியாகியுள்ள தகவல், ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

விஜய் டிவியில் TRP ரேட்டிங்கில் கெத்து காட்டிய சீரியல்களில் ஒன்று 'பாரதி கண்ணம்மா'. இந்த சீரியல், கடந்த ஆண்டு முடிவுக்கு வந்ததை தொடர்ந்து, தற்போது இந்த தொடரின் இரண்டாவது சீசன் ஒளிபரப்பாகி வருகிறது. முதல் சீசனுக்கு கிடைத்த வரவேற்பு இரண்டாவது சீசனுக்கு கிடைக்கவில்லை. TRP-யில் படு மோசமான நிலையில் உள்ளதால் விரைவில் இந்த சீரியலை நிறுத்த விஜய் டிவி முடிவு செய்துள்ளதாம்.

விஜய் டிவி சர்ச்சை பிரபலம் நாஞ்சில் விஜயனுக்கு நிச்சயதார்த்தம் முடிந்தது! வைரலாகும் புகைப்படம்!

இந்த சீரியலுக்கு பதில், பிரபல இயக்குனரும்... தளபதி விஜய்யின் தந்தையுமான எஸ்.ஏ.சந்திரசேகர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள, 'கிழக்கு வாசல்' தொடர் ஒளிபரப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் அடுத்த மாதத்தில் இருந்து பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியும் துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!