எதிர்நீச்சல் மாரிமுத்து கேரக்டரில் நடிக்கும் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் - இதென்ன புது டுவிஸ்டா இருக்கு!

First Published | Jul 13, 2023, 8:48 AM IST

எதிர்நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக கலக்கி வரும் மாரிமுத்து, நடிக்க மறுத்த கேரக்டரில் தற்போது விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் நடித்து வருகிறாராம்.

சின்னத்திரையில் தற்போது டிஆர்பியில் கலக்கி வரும் சீரியல் என்றால் அது எதிர்நீச்சல் தான். திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் மக்களை வெகுவாக கவர முக்கிய காரணம் அதன் விறுவிறுப்பான கதைக்களமும், அதில் நடிக்கும் நடிகர், நடிகைகளும் தான். இந்த சீரியலின் ஹைலைட்டான கேரக்டர் என்றால் அது ஆதி குணசேகரனாக நடிக்கும் மாரிமுத்துவின் கேரக்டர் தான். அவர் பேசும் வசனங்கள் அனைத்தும் மீம் டெம்பிளேட்டுகளாக மாறும் அளவுக்கு பேமஸ் ஆகிவிடுகின்றன.

ethirneechal

எதிர்நீச்சல் சீரியலுக்கு நாளுக்கு நாள் மவுசு அதிகரித்து வருவதன் காரணமாக அந்த சீரியல் இனி வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பப்பட உள்ளதாக அறிவித்துள்ளனர். சின்னத்திரை வரலாற்றிலேயே வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் முதல் சீரியல் என்கிற பெருமையை எதிர்நீச்சல் பெற்று உள்ளது. எதிர்நீச்சல் சீரியல் மூலம் பேமஸ் ஆன மாரிமுத்துவுக்கு பிற தொடர்களில் நடிக்கவும் வாய்ப்புகள் குவிந்து வருகிறதாம்.

இதையும் படியுங்கள்... எக்ஸைட்மெண்டான விக்னேஷ் சிவன்... தல தோனியிடம் டீ ஷிர்டில் வாங்கிய ஆட்டோகிராப்! வைரலாகும் வீடியோ!

Tap to resize

அதன்படி பிரம்மாண்ட சீரியலில் நடிக்கும் வாய்ப்பை அவர் நிராகரித்தது தற்போது தெரியவந்துள்ளது. நடிகை ராதிகா தயாரிப்பில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள சீரியல் தான் கிழக்கு வாசல். இந்த சீரியலின் மூலம் விஜய்யின் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகர் சின்னத்திரையில் காலடி எடுத்து வைக்கிறார். இதில் ஆச்சர்ய தகவல் என்னவென்றால் கிழக்கு வாசல் சீரியலில் எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்க இருந்த கேரக்டரில் எதிர்நீச்சல் மாரிமுத்துவை தான் நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தாராம் ராதிகா. இதுகுறித்து மாரிமுத்துவே பேட்டி ஒன்றில் கூறி இருக்கிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், “கிழக்கு வாசல் சீரியலில் நடிக்குமாறு ராதிகா கால் பண்ணி கேட்டார். என்னால் நடிக்க முடியாத சூழல் இருந்ததால் தற்போது எஸ்.ஏ.சந்திரசேகர் அந்த கேரக்டரில் நடிக்கிறார்” என கூறினார். எதிர்நீச்சல் சீரியலில் கறாரான கேரக்டரில் நடித்து வரும் மாரிமுத்து ஒரு வேளை கிழக்கு வாசல் சீரியலில் நடித்திருந்தால், அவரை பாசமான தந்தையாக பார்த்திருக்கலாம் என ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... TTF வாசனுக்கு விஜய் டிவி சீரியல் நடிகையுடன் திருமணமா? வைரலாகும் பத்திரிக்கை.. ஒருவழியா உண்மையை கூறிய நடிகை!

Latest Videos

click me!