azeem
பிக்பாஸ் நிகழ்ச்சி தமிழில் கடந்த 6 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியை கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கி வருகிறார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனை ஆரவ் வென்றார். இதையடுத்து ரித்விகா இரண்டாவது சீசனையும், முகென் ராவ் மூன்றாவது சீசனையும், ஆரி நான்காவது சீசனையும், ராஜு ஐந்தாவது சீசனையும் வென்று டைட்டில் வின்னர்களாகினர். அதேபோல் கடைசியாக நடந்து முடிந்த ஆறாவது சீசனில் அசீம் டைட்டில் வின்னர் ஆனார்.
azeem
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் அசீமுடன் விக்ரமன் மற்றும் ஷிவின் ஆகியோர் பைனலுக்கு சென்றிருந்தனர். இதில் விக்ரமன் தான் வெற்றிபெறுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கடைசியில் அசீமுக்கு அதிகப்படியான வாக்குகள் கிடைத்திருந்ததால் அவரே வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். அசீம் டைட்டில் வின்னராக அறிவிக்கப்பட்டது கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படியுங்கள்... தற்கொலைக்கு முயன்ற என்னை காப்பாத்துனது வடிவேலு தான்... மாரி செல்வராஜ் சொன்ன ஷாக்கிங் தகவல்
azeem
பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீசனில் வெற்றிபெற்ற அசீமுக்கு ரூ.50 லட்சத்திற்கான காசோலையும், ஒரு காரும் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வரலாற்றில் வெற்றியாளருக்கு கார் பரிசாக வழங்கப்பட்டது இதுவே முதன்முறை. பிக்பாஸ் வெற்றிக்கு பின்னர் பேசிய அசீம், தனக்கு கிடைத்த இந்த 50 லட்சம் தொகையில் இருந்து 50 சதவீதத்தை கொரோனாவால் பெற்றோரை இழந்து படிக்க முடியாமல் கஷ்டப்படும் மாணவ, மாணவிகளுக்கு உதவ உள்ளதாக அறிவித்தார்.