கின்னஸ் சாதனை படைத்துள்ள எதிர்நீச்சல் சீரியல் நடிகை... அடேங்கப்பா இவருக்குள் இவ்ளோ திறமையா!

First Published | Jul 8, 2023, 12:40 PM IST

எதிர்நீச்சல் சீரியலில் நடித்து வரும் நடிகை மோனிஷா, கின்னஸ் சாதனை படைத்துள்ளதை அறிந்த ரசிகர்கள் அவரை வியந்து பாராட்டி வருகின்றனர்.

சின்னத்திரை சீரியல் என்றாலே வெறுக்கும் இளைஞர்களைக் கூட சீரியலை ஆவலோடு பார்க்க வைக்கும் வகையில், தற்போது விறுவிறுப்பான கதைக்களத்துடன் பல்வேறு சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன. அப்படி ஆண்களையும் வெகுவாக கவர்ந்த சீரியலாக எதிர்நீச்சல் சீரியல் இருந்து வருகிறது. இந்த சீரியலை திருச்செல்வம் இயக்கி வருகிறார். தற்போது டிஆர்பி-யில் சக்கைப்போடு போட்டு முதலிடத்தில் உள்ளதும் இந்த சீரியல் தான்.

எதிர்நீச்சல் சீரியலின் வெற்றிக்கு அதன் கதைக்களம் ஒரு காரணமாக இருந்தாலும், அதில் நடித்த நடிகர், நடிகைகளும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. அந்த வகையில் இதில் பணியாற்றிய ஏராளமான நடிகர், நடிகைகளுக்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இந்த சீரியலில் இடம்பெறும் ஆதி குணசேகரன் என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ள மாரிமுத்துவுக்கு மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது.

அதேபோல் இதில் அவரது மகளாக வரும் தர்ஷினி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் தான் மோனிஷா. இவர் ஒரு கின்னஸ் சாதனை படைத்த சாதனையாளர் என்பது பலரும் அறிந்திருக்க வாய்ப்பில்லை. நடிகை மோனிஷா, கோகுல் நடத்தும் யூனிக் டேலண்ட் அகாடமி என்கிற பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று, கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இவரின் தங்கையும் ஒரு கின்னஸ் சாதனை படைத்துள்ளாராம்.

இதையும் படியுங்கள்... Gokulnath: 4 சாதனைகளுடன் கின்னஸ் புத்தகத்தில் இடம்பெற்ற தமிழ் நடிகர்.... குவியும் பாராட்டுக்கள்

Tap to resize

இந்தியாவிலேயே கின்னஸ் சாதனை படைத்த முதல் இரட்டை சகோதரிகள் என்கிற சாதனையையும் இவர்கள் படைத்துள்ளனர். அப்படி இவர் என்ன செய்து கின்னஸ் சாதனை படைத்துவிட்டார் என்று தானே கேட்கிறீர்கள். நடிகை மோனிஷா poi weaves எனப்படும் பந்தை கயற்றில் கட்டி சுற்றும் போட்டியில் ஒரு நிமிடத்தில் 80 முறை சுற்றி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். 

இதுதவிர சிலம்பத்திலும் சிறந்து விளங்கும் மோனிஷா, சர்வதேச அளவிலான சிலம்ப போட்டியில் பங்கேற்று தங்க பதக்கத்தையும் வென்றிருக்கிறாராம். மேலும் ஹார்ஸ் ரைடிங், ஜிம்நாஸ்டிக், மார்ஷியல் ஆர்ட்ஸ், ஸ்கேட்டிங், ஸ்விம்மிங் என பல்வேறு திறமைகளும் இவருக்குள் ஒளிந்திருக்கிறதாம். இதை அறிந்த ரசிகர்கள் இவருக்குள் இவ்வளவு திறமையா என ஆச்சர்யத்துடன் பார்த்து வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... "அவங்க ஸ்கிரிப்ட் படிக்கிற அழகே தனி".. அடுத்த பட பணிகளில் மும்முரம் காட்டும் சன்னி லியோன்!

Latest Videos

click me!