ethirneechal
கற்பனைக்கு அப்பாற்பட்ட கதைக்களங்களுடன் விதவிதமான திரைப்படங்கள் வந்துகொண்டிருந்தாலும், சின்னத்திரை சீரியல்களுக்கான மவுசு என்பது இன்றளவும் குறைந்தபாடில்லை. சொல்லப்போனால், முன்பை விட தற்போது தான் சீரியலுக்கான வரவேற்பு அதிகரித்து இருக்கிறது என புள்ளிவிவரங்களும் சொல்கின்றன. முன்பெல்லாம் சீரியல் என்றாலே இல்லத்தரசிகள் தான் பார்ப்பார்கள் என்கிற டிரெண்ட் மாறி தற்போது இளைஞர்களும் ஆவலோடு பார்க்கும் அளவுக்கு சீரியல்களின் கதைக்களங்கள் மாறி விறுவிறுப்படைந்துவிட்டன.
முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பப்படும் அளவுக்கு அதற்கான மவுசு எகிறி உள்ளது. ரசிகர்களின் ரசனைக்கு ஏற்பவும், சமகால டிரெண்டை மையப்படுத்தியும் சீரியல்கள் எடுக்கப்பட்டு வருவதால் அதற்கு அதிக அளவில் வரவேற்பும் கிடைத்து வருகின்றது.
தற்போது சோசியல் மீடியாவை திறந்தாலே இவர் எதிர்நீச்சல் சீரியலில் பேசிய டயலாக்குகள் தான் மீம் டெம்பிளேட்டுகளாக பயன்படுத்தப்பட்டு வருகின்றன. அந்த அளவுக்கு மக்களின் மனநிலையோடு ஒன்றிப்போகும் வகையில் அவர் பேசும் டயலாக்குகள் அமைந்துள்ளன. இதுதவிர பிரியதர்ஷினி, ஹரிப்பிரியா, மதுமிதா, விபு ராமன், கமலேஷ், சபரி பிரசாந்த் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகிறது. கோலங்கள் சீரியலை இயக்கிய திருச்செல்வம் தான் இந்த தொடரையும் இயக்கி வருகிறார்.
இந்நிலையில், எதிர்நீச்சல் சீரியலில் நடிக்கும் நடிகர், நடிகைகளின் சம்பள விவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி இதில் வில்லத்தனமான நடிப்பால மிரட்டி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்து வரும் மாரிமுத்துவுக்கு தான் அதிக சம்பளம் வழங்கப்படுகிறது. சொல்லபோனால் இதில் ஹீரோவாக நடிக்கும் சபரியை விட டபுள் மடங்கு சம்பளம் வாங்குகிறார் மாரிமுத்து. அவருக்கு ஒரு நாளைக்கு ரூ.20 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறது.