எங்ககிட்டயே நடிக்கிறீயா; போலீசிடம் செம்ம டோஸ் வாங்கிய ரச்சிதா- மாங்காடு ஸ்டேஷனில் நடந்த ஷாக்கிங் சம்பவம்

First Published | Jul 3, 2023, 6:47 PM IST

தன்னுடைய கணவர் தினேஷ் தனக்கு தொடர்ந்து ஆபாச மெசேஜ்களை அனுப்பி வருவதாக நடிகை ரச்சிதா கூறியது பொய் என மாங்காடு போலீசார் கண்டுபிடித்து அவரை எச்சரித்து அனுப்பியதாக கூறப்படுகிறது.

Rachitha Mahalakshmi

பெங்களூரை சேர்ந்தவரான ரச்சிதா, தமிழில் சின்னத்திரை சீரியல்களில் நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பேமஸ் ஆனார். பிரிவோம் சந்திப்போம் தொடரின் மூலம் அறிமுகமான ரச்சிதா, பின்னர் சரவணன் மீனாட்சி தொடரில் நடிகர் ரியோவுக்கு ஜோடியாக நடித்ததன் மூலம் மக்கள் மனதில் மீனாட்சியாகவே மாறிவிட்டார். அந்த அளவுக்கு அவருக்கு இந்த கதாபாத்திரம் மிகப்பெரிய பெயரையும், புகழையும் பெற்றுத்தந்தது.

இதையடுத்து சக சீரியல் நடிகரான தினேஷ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ரச்சிதா, அவருக்கு ஜோடியாக சீரியலிலும் நடித்து வந்தார். ஜாலியாக சென்றுவந்த இவர்களது திருமண வாழ்க்கையில் திடீரென ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், தினேஷை பிரிந்து சென்றார் ரச்சிதா. இவர்களின் பிரிவால், இவர்கள் நடித்து வந்த சீரியலும் நிறுத்தப்பட்டது. இதையடுத்து தினேஷை ரச்சிதா விவாகரத்து செய்ய உள்ளதாகவும் பேச்சு அடிபட்டது.

Tap to resize

இந்த நிலையில் தான் கடந்தாண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக களமிறங்கினார் ரச்சிதா. அந்நிகழ்ச்சியில் தன்னுடைய கணவர் குறித்து ரச்சிதா வாய் திறக்காமல் இருந்தாலும், வெளியில் இருந்து தினேஷ் ரச்சிதாவிற்காக ஆதரவு திரட்டி வந்தார். ரச்சிதா குறித்து பல்வேறு பேட்டிகளும் கொடுத்த அவர், தாங்கள் விவாகரத்து செய்யவில்லை என்றும் தெரிவித்து இருந்தார்.

இதையும் படியுங்கள்... நள்ளிரவில் திடுதிப்புனு காவல் நிலையத்திற்கு ஓடிய பிக்பாஸ் ரக்ஷிதா! கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார்..!

இதனால் பிக்பாஸில் இருந்து வெளியே வந்ததும் தினேஷும் ரச்சிதாவும் சேர்ந்துவிடுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் பிக்பாஸுக்கு பின் அனைத்துமே உல்டாவாக நடந்தது. கடந்த வாரம் நடிகை ரச்சிதா திடீரென மாங்காடு காவல்நிலையத்திற்கு நள்ளிரவில் சென்று தன்னுடைய கணவர் தினேஷ் மீது பரபரப்பு புகார் அளித்தார். அதில் தினேஷ் தனது ஆபாச மெசேஜ் அனுப்பி, மிரட்டுவதாக கூறி இருந்தார்.

இதையடுத்து இதுகுறித்து போலீசார் தினேஷை அழைத்து விசாரணையும் மேற்கொண்டனர். இந்த விவகாரத்தில் நடிகை ரச்சிதா நாடகமாடியதாக பிரபல சினிமா பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன், யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறி உள்ளார். அதன்படி, மாங்காடு போலீசார் தினேஷை அழைத்து விசாரித்தபோது, அவள் விவாகரத்து கேட்டா நான் கையெழுத்து போட ரெடி என கூறினாராம். பின்னர் சந்தேகத்தின் பேரில் ரச்சிதாவின் செல்போனை போலீசார் பரிசோதனை செய்தார்களாம். அப்போது தினேஷிடம் இருந்து எந்தவித ஆபாச மெசேஜும் வரவில்லையாம்.

இதையடுத்து ரச்சிதாவை அழைத்து இனி இதுபோல் பொய்யான புகார் அளித்தால் கடுமையான ஆக்‌ஷன் எடுத்துவிடுவேன் என சொன்னதும் பதறிப்போன ரச்சிதா, தன்னுடைய வக்கீல் தான் இவ்வாறு புகார் அளிக்க சொன்னார். இப்படி புகார் அளித்தால் தான் விவாகரத்து கிடைக்கும் என சொன்னார். அதனால் தான் அப்படி செய்தேன் என சொன்னாராம். வக்கீல் சொன்னா என்ன வேண்டுமானாலும் செய்வியா என ரச்சிதாவுக்கு செம்ம டோஸ் கொடுத்து அனுப்பினார்களாம் போலீசார். ரச்சிதா குறித்து பயில்வான் கூறியுள்ள இந்த தகவல் சின்னத்திரை வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படியுங்கள்... பிரபல யூடியூபர் இயக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கும் நயன்தாரா... இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே!

Latest Videos

click me!