வனிதா முதல் ஸ்ருத்திகா வரை... சைலண்டாக பிசினஸில் கொடிகட்டிப் பறக்கும் சின்னத்திரை நடிகைகளின் லிஸ்ட் இதோ

First Published | Jun 30, 2023, 4:03 PM IST

சினிமா நடிகர், நடிகைகள் செய்துவருவது போல், சின்னத்திரை சீரியல் நடிகைகளும் பிசினஸில் நன்கு சம்பாதித்து வருகின்றனர். அவர்களைப் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

சினிமாவில் ஹீரோ, ஹீரோயினாக நடிக்கும் நடிகர், நடிகைகள் ஏராளமான பிசினஸும் செய்து வருவது அனைவரும் அறிந்ததே, குறிப்பாக நடிகை நயன்தாரா தனியாக லிப் பாம் என்கிற அழகு சாதன பொருள் கம்பெனியை நடத்தி வருவது முதல் துபாயில் எண்ணெய் பிசினஸில் முதலீடு செய்துள்ளது வரை பல்வேறு தொழில்களை செய்கிறார். அந்த வகையில் சீரியல் நடிகைகள் என்னென்ன பிசினஸ் செய்கிறார்கள் என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

வனிதா விஜயகுமார்

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பேமஸ் ஆனவர் வனிதா விஜயகுமார். பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் யூடியூப் சேனல் ஒன்றை தொடங்கி அதன் மூலம் சம்பாதித்து வந்த வனிதா, ஏராளமான பிசினஸும் செய்து வருகிறார். இவர் சொந்தமாக ஆடை மற்றும் அழகு சாதன பொருட்கள் விற்பனையகம், பேஷன் டிசைனிங் என நிறைய தொழில்கள் செய்து வருகிறார்.


விஜே மகேஸ்வரி

தொகுப்பாளினியாக இருந்து பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டதன் மூலம் பிரபலம் ஆனவர் தான் விஜே மகேஸ்வரி. இவரும் சொந்தமாக உணவகம் ஒன்றை நடத்தி வருகிறாராம். அதுமட்டுமின்றி அழகு நிலையம் ஒன்றையும் வைத்திருக்கிறாராம். இதுதவிர படங்களிலும் நடித்து வருகிறார் மகேஸ்வரி.

இதையும் படியுங்கள்... இஞ்சி இடுப்பழகியாக மாறிய சாய் தன்ஷிகாவின் ரெட் ஹாட் போட்டோஸ் இதோ

ஸ்ரீதேவி அசோக்

சன் டிவி, விஜய் டிவி போன்ற முன்னணி சேனல்களில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் வில்லியாக நடித்து பாபுலர் ஆனவர் தன் ஸ்ரீதேவி அசோக். திருமணமாகி குழந்தை பெற்ற இவர், சொந்தமாக பேன்சி ஜுவல்லரி ஷாப் ஒன்றையும் நடத்தி, அதன்மூலம் நன்கு வருமானமும் ஈட்டி வருகிறாராம்.

சைத்ரா ரெட்டி

சன் டிவியில் ஒளிபரப்பாகும் கயல் என்கிற சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் தான் சைத்ரா ரெட்டி, இவர் அஜித்துடன் வலிமை படத்திலும் நடித்திருந்தார். சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் கலக்கி வரும் சைத்ரா ரெட்டி சொந்தமாக பியூட்டி பார்லர் ஒன்றையும் நடத்தி வருகின்றாராம்.

ஸ்ருத்திகா

குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் கம்பேக் கொடுத்தவர் தான் ஸ்ருத்திகா. இவர் ஸ்ரீ என்கிற திரைப்படத்தில் நடிகர் சூர்யாவுக்கு ஜோடியாக நடித்தவர் ஆவார். தற்போது சின்னத்திரை நிகழ்ச்சிகளில் பிசியாக இருக்கும் ஸ்ருத்திகா சொந்தமாக இரண்டு காஸ்மெட்டிக்ஸ் பிராண்டுகளையும் நிர்வகித்து வருகிறாராம்.

இதையும் படியுங்கள்... வீரன் முதல் குட்நைட் வரை... இந்த வாரம் மட்டும் ஓடிடியில் இத்தனை படங்கள் ரிலீஸ் ஆகிறதா? முழு லிஸ்ட் இதோ

Latest Videos

click me!