டி.ஆர்.பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்களை தும்சம் செய்த சன் டிவி தொடர்கள்! டாப் 5 லிஸ்டில் ஒன்றுகூட இல்லை!

First Published | Jun 30, 2023, 4:00 PM IST

இந்த வாரம் டி.ஆர்.பி ரேட்டிங்கில் கெத்து காட்டிய 5 முக்கிய சீரியல்கள் குறித்த விவரங்களை இந்த தொகுப்பில் பார்ப்போம்.
 

திரையரங்கில் வெளியாகும் ஓவ்வொரு படங்களும் வசூலிலும், மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற நினைப்பது போல், சீரியல் மற்றும் டிவியில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகளின் வெற்றியை கணிப்பது.. ஒவ்வொரு வாரமும் வெளியாகும் டி.ஆர்.பி ரேட்டிங் தான். அந்த வகையில், இந்த வாரம் டாப் 5 டி.ஆர்.பி-யை கைப்பற்றிய சீரியல்கள் பற்றி பார்ப்போம்.
 

எதிர்நீச்சல்:

சன் டிவி தொலைக்காட்சியில் இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'எதிர்நீச்சல்'. மதுமிதா, (ஜனனி) என்கிற கதாபாத்திரத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார்.  பல பொய்களை சொல்லி ஜனனியை தன்னுடைய தம்பி சக்திக்கு திருமணம் செய்து கொண்டு வரும் குணசேகரன்... ஆணாதிக்கத்தை வெளிக்காட்டி ஜனனியை அடக்கி ஆள நினைக்கிறார். குணசேகரனை அப்பத்தா துணையோடு, எதிர்த்து ஜனனி போராடி வரும் நிலையில், ஆதிரையின் திருமண விஷயத்தில் குணசேகரன் வெற்றி பெறுகிறார். எனினும் அந்த வாழ்க்கையில் இருந்து ஆதிரையை ஜனனி மீட்பாரா என்கிற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வருகிறது எதிர்நீச்சல். இந்த சீரியல் இதுவரை எந்த சீரியலும் இதுவரை பெற்றிராத டி.ஆர்.பி ரேட்டிங்கை பெற்றுள்ளது. இந்த வாரம் 11.16 புள்ளிகளை பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

50 வயதில் கர்ப்பம்.. வளைகாப்பு போஸ்டருடன் வெளியான பிக்பாஸ் ரேகாவின் 'மிரியம்மா' ஃபர்ஸ்ட் லுக்!
 

Tap to resize

கயல்:

பல மாதங்களாக முதல் இடத்தை தக்க வைத்து கொண்டிருந்த கயல் தொடர் தற்போது, இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. இயக்குனர் பி.செல்வம் இயக்கி வரும் இந்த சீரியலில், நடிகை சைத்ரா ரெட்டி, கயல் என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோயினாக நடித்து வருகிறார். சஞ்சீவ் ஹீரோவாக நடித்து வருகிறார். தன்னுடைய குடும்பம் நல்லா இருக்க கூடாது என என்னும் பெரியப்பாவிடம், எந்த விஷயத்திற்கும் இறங்கி போக கூடாது என, பல பிரச்சனைகளை எதிர்த்து குடும்பத்துக்காக நாயகி போராடுவதை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல், இந்த வாரம்... 10.88 புள்ளிகளுடன், இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
 

சுந்தரி:

IAS ஆகவேண்டும் என்கிற ஆசையோடு, கிராமத்தில் இருந்து.. தன்னை பிடிக்காத ஒருவரை திருமணம் செய்து கொண்டு வரும் சுந்தரி, தன்னுடைய கணவர் இரண்டாம் திருமணம் செய்து கொண்டதையும், அவருக்கு குழந்தை பிறக்க உள்ள விஷயத்தையும், தன்னுடைய குடும்பத்தினரிடம் இருந்து மறைத்து, தன்னை பழி வாங்க சதித்திட்டம் தீட்டும் முயற்சியையும் முறியடித்து... தன்னுடைய கனவை சுந்தரி எட்டிப்பிடிப்பாரா? என்கிற கோணத்தில் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியல் 9.85 புள்ளிகளுடன் மூன்றாம் இடத்தை பிடித்துள்ளது.

என் அம்மா முன்னாடியே அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அசிங்கமா கேட்டாங்க! குமுறும் ஜீ தமிழ் சீரியல் ஹீரோயின் ஸ்வாதி ஷர்மா!

வானத்தை போல:

அண்ணன் - தங்கை பாசத்தை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், ஒருவழியாக சின்ராசு மற்றும் பொன்னி ஆகியோர் குடும்பம் நடத்த தயாரியுள்ள நிலையில், துளசி - ராஜபாண்டி வாழ்க்கையில் பூகம்பத்தை கிளப்ப நேரம் பார்த்து காத்திருக்கிறார் வெற்றி. இந்த சீரியல் இந்த வாரம், 9.71 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது.

இனியா:

5-ஆவது இடத்தை பிடித்துள்ளது 'இனியா' தொடர். பெண்கள் எப்போதுமே ஆண்களுக்கு அடங்கித்தான் போக வேண்டும் என நினைக்கும் மாமனாரிடம், ஆணும் - பெண்ணும் சமம் என நினைக்கும் மருமகளுக்கும்  இடையே நடக்கும் போராட்டமே இனியா தொடர். எதிர்பாராத, திருப்புமுனைகளுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், இந்த வாரம் 9.62 புள்ளிகளுடன் 5 ஆவது இடத்தை பிடித்துள்ளது.

Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.! ஏன்? வெளியான அதிர்ச்சி காரணம்.!

பொதுவாக விஜய் டிவி தொடர்கள், டாப் 5 ரேட்டிங் லிஸ்டில் இடம்பிடித்து வரும் நிலையில்... இந்த வாரம் சன் டிவி சீரியல்கள் ரேட்டிங்கில் அடித்து தும்சம் செய்துள்ளதால் ஒரு சீரியல் கூட டாப் 5 லிஸ்டில் இடம்பெறவில்லை. ஆனால் டாப் 10 லிஸ்டில், 7ஆவது இடத்தில் பாக்கிய லட்சுமி தொடரும், 8ஆவது இடத்தில் பாண்டியன் ஸ்டார் தொடரும், 10ஆவது இடத்தில் சிறகடிக்க ஆசை சீரியலும் உள்ளது, என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!