என் அம்மா முன்னாடியே அட்ஜஸ்ட்மென்ட் பற்றி அசிங்கமா கேட்டாங்க! குமுறும் ஜீ தமிழ் சீரியல் ஹீரோயின் ஸ்வாதி ஷர்மா!

First Published | Jun 29, 2023, 2:41 PM IST

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'நினைத்தாலே இனிக்கும்' சீரியலில் ஹீரோயின் ஸ்வாதி ஷர்மா, தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை குறித்து பேசி அதிரவைத்துள்ளார்.
 

சமீப காலமாகவே, வெள்ளித்திரை நடிகைகளை தொடர்ந்து... சின்னத்திரை பிரபலங்கள் பலரும்,  பட வாய்ப்பு தேடி சென்றபோது தங்களிடம் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொன்னதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார்கள். சமீபத்தில் தான், பாண்டியன் ஸ்டார் சீரியல் நடிகை லாவண்யா, மற்றும் ஆனந்த ராகம் சீரியல் நடிகை ரிஹானா ஆகியோர் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அவரை தொடர்ந்து மற்றொரு சீரியல் நடிகையும் தனக்கு நேர்ந்த இந்த பிரச்சனை குறித்து வாய் திறந்துள்ளார்.

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும், 'நினைத்தாலே இனிக்கும்' சீரியலில் பொம்மி கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸ்வாதி ஷர்மா. இவர் கல்லூரி காலங்களிலேயே மாடலிங் செய்ய துவங்கி... பின்னர் பல படங்களில் நடிக்க வாய்ப்பு தேடியும், கிடைக்காமல் போகவே, சீரியல் நடிகையாக மாறினார்.

பிரபல நடிகர் அதிர்ச்சி மரணம்! பிரபலங்கள் இரங்கல்!

Tap to resize

ஸ்வாதி ஷர்மா திரைப்பட வாய்ப்பு தேடிய காலங்களில் தன்னுடைய அம்மாவுடன் தான், வாய்ப்பு கொடுப்பதாக அழைக்கும் சினிமா கம்பெனிகளுக்கு செல்வதை வழக்கமாக வைத்துள்ளார். அப்படி அவர் சென்ற ஒரு இடத்தில், ஸ்வாதியிடம் அவர் அம்மாவின் முன்பே.. ஒருவர் மிகவும் அசிங்கமாக அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியுள்ளார். இதனால், ஆத்திரம் அடைந்த ஸ்வாதியின் அம்மா, அந்த நபரையும், ஸ்வாதியையும் செம்மையாக திட்டியுள்ளார்.

ஒரு கட்டத்தில் இந்த நடிப்பே உனக்கு வேண்டாம் என அவர் அம்மா கூறிவிட, அவரை சமாதானம் செய்து... பின்னர் கன்னட சீரியல்களில் நடிக்க துவங்கினார். இதை தொடர்ந்து தமிழில், 'நினைத்தாலே இனிக்கும்' சீரியலில் இவருக்கு நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. சென்னைக்கு நடிக்க வரும் போது கூட... பயந்து தான் வந்ததாகவும் பின்னரே அனைத்தும் சகஜ நிலைக்கு திரும்பியதாக கூறியுள்ளார்.

Ethirneechal Serial: எதிர்நீச்சல் சீரியலில் இருந்து விலகும் முக்கிய பிரபலம்.! ஏன்? வெளியான அதிர்ச்சி காரணம்.!

அட்ஜஸ்ட்மென்ட் குறித்து, 'நினைத்தாலே இனிக்கும்' சீரியல் நடிகையான சுவாதி ஷர்மா கூறியுள்ள தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திரையுலகில் வாய்ப்பு தேடும் பல... இது போன்ற பிரச்சனையின் காரணமாக வெள்ளித்திரை வேண்டாம் சின்னத்திரையே போதும் என்கிற முடிவுக்கு வருகிறார்கள் என்பது, இவரின் விஷயத்தில் இருந்து தெரிகிறது.

Latest Videos

click me!