பாட்டு பாட போனாலே... முதல்ல நீ என்ன சாதி-ன்னு தான் கேட்பார்கள்... சூப்பர் சிங்கர் அருணா சொன்ன பகீர் தகவல்

Published : Jun 27, 2023, 08:35 AM IST

சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசனில் வெற்றி பெற்ற அருணா, சாதி குறித்த கேள்விகளால் தான் மனமுடைந்து போனதாக தெரிவித்துள்ளார்.

PREV
14
பாட்டு பாட போனாலே... முதல்ல நீ என்ன சாதி-ன்னு தான் கேட்பார்கள்... சூப்பர் சிங்கர் அருணா சொன்ன பகீர் தகவல்
super singer Aruna

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் ஆண்டு தோறும் இந்நிகழ்ச்சி நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் நடைபெற்றது. இதன் இறுதிப்போட்டி அண்மையில் முடிவடைந்தது. இறுதிப் போட்டியில் அருணா, பூஜா, பிரசன்னா, பிரியா ஜெர்சன், அபிஜித் ஆகியோர் பங்கேற்றனர். இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் தான் இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

24
super singer Aruna

இந்த இறுதிப்போட்டியில் மக்கள் அளித்த வாக்குகள் மற்றும் நடுவர்கள் அளித்த மதிப்பெண்கள் அடிப்படையில் அருணா வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். இதையடுத்து பிரியா ஜெர்சனுக்கு இரண்டாவது இடமும், பிரசன்னாவுக்கு மூன்றாவது இடமும் கிடைத்தது. வெற்றிபெற்ற அருணாவுக்கு ரூ.60 லட்சம் மதிப்பிலான வீடும், ரூ.10 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. இதன்மூலம் சூப்பர் சிங்கர் வரலாற்றில் டைட்டில் வென்ற முதல் பெண் போட்டியாளர் என்கிற சாதனையையும் அருணா படைத்தார்.

இதையும் படியுங்கள்... அடேங்கப்பா 'புராஜெக்ட் கே' படத்தில் நடிக்க ஹீரோ பிரபாஸை விட வில்லன் கமலுக்கு இத்தனை கோடி சம்பளமா?

34
super singer Aruna

சூப்பர் சிங்கர் டைட்டில் ஜெயித்த அருணா, சாதியால் தான் சந்தித்த பிரச்சனைகள் குறித்து மனம்விட்டு பேசினார். அவர் பேசியதாவது : “சூப்பர் சிங்கருக்கு வரும் முன்னர் நான் நிறைய மேடைகளில் பாடி இருக்கிறேன். அப்போதெல்லாம் என்னிடம் அவர்கள் கேட்கும் முதல் கேள்வி நீங்க என்ன சாதி என்பது தான். எனது சாதியை சொல்லிவிட்டால் எனக்கு அடிக்கடி பாட வாய்ப்புகள் கிடைக்காமல் போய்விடுமோ என்கிற பயத்தில் நான் சாதியை சொல்லாமல் தவிர்த்திருக்கிறேன்.

44
super singer Aruna

செல்லும் இடமெல்லாம் இப்படி கேட்டதால் நான் வெளியில் சென்று பாடுவதற்கே பயந்து வீட்டிலேயே முடங்கி இருந்த நாட்களும் உண்டு. இந்த சூப்பர் சிங்கர் வெற்றி தான் நான் அவர்களுக்கு கொடுக்கும் பதில். இனி என்னால் உலகின் எந்த மூலைக்கும் சென்று பாட முடியும் என்கிற நம்பிக்கை வந்துள்ளது” என உணர்வுப்பூர்வமாக பேசி ஆனந்த கண்ணீர் சிந்தினார் அருணா. வெற்றி பெற்ற அருணாவுக்கு வாழ்த்துக்களும் குவிந்த வண்ணம் உள்ளன.

இதையும் படியுங்கள்... ஜவான் பட டீசர் எப்போது? ஷாரூக்கானிடம் நண்பருக்கு வாய்ப்பு கேட்ட ரசிகர்... சுவாரஸ்யமான கேள்விகளுக்கு SRK பதில்!

click me!

Recommended Stories