விஜய் டிவியில் நடத்தப்படும் ரியாலிட்டி ஷோக்களில் மிகவும் பிரபலமானது சூப்பர் சிங்கர். ஆண்டுதோறும் நடத்தப்படும் இந்நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய ரசிகர் பட்டாளமே உண்டு. தமிழகமெங்கும் பல்வேறு மாவட்டங்களில் ஆடிஷன்கள் நடத்தப்பட்டு அதில் தேர்வான டாப் 20 போட்டியாளர்களை வைத்து இந்நிகழ்ச்சி நடத்தப்படும். அந்த வகையில் இந்த ஆண்டு சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 9-வது சீசன் 20 போட்டியாளர்களுடன் கோலாகலமாக தொடங்கி நடைபெற்றது.
இந்த 20 பேரில் இருந்து அருணா, பூஜா, அபிஜித், பிரசன்னா, பிரியா ஜெர்சன் ஆகிய 5 போட்டியாளர்கள் இறுதிப் போட்டிக்கு முன்னேறினர். இந்நிகழ்ச்சியின் இறுதிப் போட்டி இன்று நடத்தப்பட்டது. சூப்பர் சிங்கர் சீசன் 9 நிகழ்ச்சியின் பைனலுக்கு சிறப்பு விருந்தினராக இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் வந்திருந்தார். இறுதிப்போட்டியில் போட்டியாளர்களின் அசத்தலான திறமையை பார்த்து ஹாரிஸ் ஜெயராஜ் வியந்து போனார்.