சன் டிவி தொலைக்காட்சியில், பிரைம் டைமில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று 'எதிர்நீச்சல்'. திருச்செல்வம் இயக்கத்தில் இந்த சீரியல் கடந்த ஒரு வருடங்களுக்கு மேலாக ஒளிபரப்பாகி வருகிறது. ஆணாதிக்கம் நிறைந்த குடும்பத்திற்கு மருமகளாக வரும் ஜனனி, மற்ற மருமகள்களுக்கும் நியாயம் கிடைக்க வேண்டும் என போராடி வருவதே இந்த சீரியலில் மைய கரு.
ஜனனி எப்படியும் ஆதிரையின் ஆசைப்படி அருணுக்கே திருமணம் செய்து வைக்க வேண்டும் என பல்வேறு ரிஸ்க்குகளை எடுக்கிறார். முதலில் ஆதிரையின் அம்மா விசாலாட்சி கூட இதற்கு ஒப்புக்கொள்ளாத நிலையில், பின்னர் மகளின் ஆசையை புரிந்து கொண்டு அவருக்கே திருமணம் செய்து வைக்க நினைக்கிறார். மேலும் அருணுக்கும் - ஆதிரைக்கும் கோவிலில் திருமணம் செய்து வைக்க ஜனனி முடிவு செய்கிறார்
ஆனால் அருண் குறித்த நேரத்தில் கோவிலுக்கு வரவில்லை. இது குறித்து ஜனனி தன்னுடைய நண்பர் கௌதமிடம் கூறி விசாரித்த போது, அருண் வீட்டில் இருந்து கோவிலுக்கு கிளம்பி சென்றுள்ளார், ஆனால் பாதியிலேயே அவர் காணாமல் போய் இருக்கிறார்.... என்ற அதிர்ச்சி தகவலை கூறுகிறார். அடுத்து என்ன செய்வது என தவித்து கொண்டிருக்கிறார் ஜனனி. இந்த சமயத்தில் ஆதிரை திருமணம் செய்து கொள்ள கோவிலுக்கு சென்றிருக்கும் தகவல் குணசேகரனுக்கு தெரியவர, தன்னுடைய தம்பிகள் கதிர், ஞானம், மற்றும் ஜான்சி ராணி, கரிகாலன் ஆகியோரோடு கோவிலுக்கு வந்து சேர்கிறார்.
வயசுக்கு மரியாதை வேண்டாமா? பரியேறும் பெருமாள் படத்தில்.. வசனம் மறந்ததால் நெல்லை தங்கராஜை அறைந்த மாரி செல்வராஜ்
கோவிலில் இருந்து அனைவரையும் அழைத்து கொண்டு ஜனனி செல்வதற்கு முன்பு, குணசேகரன் அனைவரையும் சுற்றி வளைக்கிறார். பின்னர், பிரச்சனைகள் ஏற்பட , நடுரோட்டிலேயே... கரிகாலன் கையில் தாலியை கொடுத்து, ஆதிரையின் கழுத்தில் கட்ட வைக்கிறார் குணசேகரன்.