திடீரென அடி ஆட்களுடன் வீட்டிற்கு வந்த அர்னவ்... குழந்தையை கொல்ல பார்ப்பதாக கதறிய திவ்யா ஸ்ரீதர்

First Published | Jun 14, 2023, 10:10 AM IST

அர்னவ் அடி ஆட்களுடன் வந்து தன்னை மிரட்டியதாகவும், அவர்மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர் பரபரப்பு பேட்டி அளித்துள்ளார்.

செவ்வந்தி சீரியல் மூலம் பிரபலமானவர் திவ்யா ஸ்ரீதர். இவருக்கு, சீரியல் நடிகர் அர்னவ்விற்கு காதல் ஏற்பட்டு கடந்தாண்டு திருமணம் செய்துகொண்டனர். திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமான நடிகை திவ்யா, அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்தியதாக கூறி மருத்துவமனையில் இருந்து வீடியோ வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார். இதையடுத்து கைதான அர்னவ் பின்னர் ஜாமினில் வெளியே வந்துள்ளார்.

நடிகை திவ்யா ஸ்ரீதருக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்னர் குழந்தை பிறந்தது. இந்த நிலையில் சமீபத்தில் நடிகர் அர்னவ் 2 பெண்களை ஏமாற்றியதாக கூறி, அதுகுறித்த ஆடியோ ஒன்றையும் வெளியிட்டு இருந்தார் நடிகை திவ்யா ஸ்ரீதர். இச்சம்பவத்தை அடுத்து நடிகர் அர்னவ் அடி ஆட்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் வந்து தன்னுடைய வீட்டில் தகராறு செய்ததாக நடிகை திவ்யா ஸ்ரீதர் பரபரப்பு குற்றச்சாட்டை முன் வைத்துள்ளார்.

Tap to resize

இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : “இவ்ளோ நாள் வீட்டு பக்கமே வராமல் இருந்த அர்னவ், திடீரென 13 பேருடன் வந்து என் வீட்டு கதவை தட்டினார். கதவை திறந்ததும் அர்னவ் இருந்ததை பார்த்ததும், அவர் ஜாமினில் வெளியே வந்திருக்கிறார். போலீஸ் அனுமதியின்றி அவர் இங்கே வரக்கூடாது என சொன்னேன். உடனே அவருடன் வந்தவர்கள் இது அர்னவ் வீடு எனக்கூறி கதவை தள்ளினார்கள்.

இதையும் படியுங்கள்... விஜய் சேதுபதி சம்பளமே வாங்காமல் நடித்த ‘அழகிய கண்ணே’ திரைப்படத்தின் டிரைலர் இதோ

பின்னர் கதவை பூட்டிவிட்டு என்னுடைய வழக்கறிஞர்கள் மற்றும் போலீசுக்கு தகவல் தெரிவித்துவிட்டேன். அர்னவ் என்னை நோட்டமிடுவதற்காக உளவாளி ஒருவரை வைத்திருக்கிறான். அதனால் நான் எங்கு செல்கிறேன் என்கிற அனைத்து விஷயமும் அவனுக்கு தெரிந்துவிடுகிறது. கைக் குழந்தையுடன் கஷ்டப்பட்டு காலையில் ஷூட்டிங் சென்றால், இரவு தான் வீட்டிற்கு வருகிறேன். என்னப்போன்று அர்னவால் வேறு எந்த பெண்ணும் பாதித்துவிடக் கூடாது என்பதற்காக தான் அந்த ஆடியோவை வெளியிட்டேன்.

அதைக்கேட்டு இங்கு வந்துவிட்டு, இது என்னோட வீடு காலிபண்ணுனு சொல்றாரு. தற்போது அவர் நிபந்தனை ஜாமினில் இருக்கிறார். இந்த சமயத்தில் அவர் என்னுடைய வீட்டிற்கு வரவே கூடாது. என்னை கொடுமைப்படுத்தி, என் குழந்தையையும் கொல்ல பார்த்த அர்னவ்வால் தற்போது எனக்கு பாதுகாப்பு இல்லை. வீட்டில் 2 வயதானவர்களும் இருக்கிறார்கள். இப்படி இருக்கும் சூழலில் அர்னவ் என் வீட்டிற்கு வந்து மிரட்டி ரவுசியிசம் செய்கிறார். இந்த வேளையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி முதல்வரிடமும் கேட்டுக்கொள்கிறேன்” என கண்ணீர் மல்க பேசியுள்ளார் திவ்யா.

இதையும் படியுங்கள்...  மாடர்ன் குந்தவையாக மாறிய சிவாங்கி... ‘உயிர் உங்களுடையது தேவி’ என உருகும் ரசிகர்கள்

Latest Videos

click me!