விலகியதற்கான காரணத்தை அவர் தெரிவிக்காததால், அவர் கர்ப்பமாக இருப்பதனால் விலகினார் என்றும், அவருக்கு நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதால் விலகினார் என்றும் பலவிதமான செய்திகள் உலா வரத் தொடங்கின. இந்நிலையில், தற்போது குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சிக்கு திடீரென ரீ-எண்ட்ரி கொடுத்து ரசிகர்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளார் மணிமேகலை.