குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் எதிர்பாரா டுவிஸ்ட்... முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்த போட்டியாளர் யார் தெரியுமா?

First Published | Jun 25, 2023, 11:38 AM IST

குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஆளாக பைனலுக்குள் நுழைந்த போட்டியாளர் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது.

cook with comali

ரசிகர்களின் மனம் கவர்ந்த ஷோவான குக் வித் கோமாளி, இதுவரை மூன்று சீசன்கள் முடிந்து, தற்போது நான்காவது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 10 போட்டியாளர்களுடன் ஆரவாரமாக தொடங்கிய குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 4-வது சீசன் தற்போது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது. இந்த சீசனில் தற்போது விசித்ரா, மைம் கோபி, சிருஷ்டி டாங்கே, கிரண் மற்றும் சிவாங்கி ஆகியோர் டாப் 5 போட்டியாளர்களாக தேர்வாகினர்.

cook with comali

இந்த டாப் 5 போட்டியாளர்களில் யார் முதல் ஆளாக பைனலுக்குள் நுழைய போகிறார் என்பதை தீர்மானிக்கும் டிக்கெட் டூ பினாலே டாஸ்க் இந்த வாரம் நடத்தப்பட்டது. இந்த டாஸ்க்கில் சிறப்பு விருந்தினராக கிரிக்கெட் வீரர்கள் வெங்கடேஷ் ஐயர் மற்றும் வருண் சக்ரவர்த்தி ஆகியோர் கலந்துகொண்டனர். அவர்கள் இருவரும் இந்த நிகழ்ச்சியின் மிகப்பெரிய ரசிகர்களாம். குறிப்பாக கொரோனா காலகட்டத்தில் பபுளில் இருந்தபடி ஐபிஎல் போட்டிகளில் பங்கேற்றபோது தங்களை மகிழ்வித்தது இந்த நிகழ்ச்சி தான் என இருவருமே தெரிவித்தனர்.

இதையும் படியுங்கள்... 46 வயசானாலும் குழந்தை சார் நீங்க... மகனின் சைக்கிளில் ஜாலியாக ரைடு போன செல்வராகவன் - வைரலாகும் கியூட் வீடியோ

Tap to resize

cook with comali

இந்த டிக்கெட் டூ பினாலே டாஸ்க்கில் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மற்றுமொரு தீவிர ரசிகரான தமிழக கிரிக்கெட் வீரர் விஜய் சங்கர் வீடியோ கால் வாயிலாக வந்து அனைவருக்கும் தனது வாழ்த்துக்களை தெரிவித்தார். இதையடுத்து டாப் 5 போட்டியாளர்களுக்கு இடையே நடந்த அட்வாண்டேஜ் டாஸ்க்கில் கிரணும், குரேஷியும் வெற்றிபெற்றனர். அந்த டாஸ்க்கில் அதிகளவிலான ஜவ்வு மிட்டாய்களை செய்து அவர்கள் வெற்றி வாகை சூடினர்.

cook with comali

இதற்கு அடுத்தபடியாக மெயின் டாஸ்க் இன்று ஒளிபரப்பாக உள்ளது. இதில் வெற்றி பெற்று யார் முதல் ஆளாக பைனலுக்குள் செல்லப் போகிறார் என்பதை தெரிந்துகொள்ள ரசிகர்கள் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், அந்த டாஸ்க்கின் வெற்றியாளர் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி நடிகை விசித்ரா தான் இந்த மெயின் டாஸ்க்கில் வெற்றி பெற்று முதல் ஆளாக குக் வித் கோமாளி சீசன் 4 நிகழ்ச்சியின் பைனலுக்கு தகுதி பெற்றுள்ளாராம்.

இதையும் படியுங்கள்... சாதி, மதம் பார்க்காம குழந்தைகளை படிக்கவையுங்கடா... தேவர்மகன் சர்ச்சை குறித்து நடிகர் சதீஷ் பேட்டி

Latest Videos

click me!