மகன் பிறந்து பல வருடங்கள் கழித்து... இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்!

Published : Jun 30, 2023, 08:57 PM ISTUpdated : Jun 30, 2023, 09:01 PM IST

பிரபல சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ், இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருக்கும் தகவலை புகைப்படம் வெளியிட்டு அறிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து இவருக்கு ரசிகர்கள் பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  

PREV
16
மகன் பிறந்து பல வருடங்கள் கழித்து... இரண்டாவது குழந்தைக்கு தாயாக போகும் சீரியல் நடிகை காயத்ரி யுவராஜ்!

சென்னையைச் சேர்ந்த நடிகை காயத்ரி யுவராஜ், சிறுவயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என நினைத்தவர். இதனால் முறையாக நடனமும் கற்றுக்கொண்டார். கல்லூரியில் படிக்கும் போதில் இருந்தே... பல ஆடிஷன்களில் கலந்து கொண்டு, தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்திய போதிலும் இவருக்கான வாய்ப்புகள் கிடைக்கவில்லை. 

26

ஆனால் பிரபல தனியார் தொலைக்காட்சியில், 'மானாட மயிலாட' என்கிற ரியாலிட்டி ஷோவில் டான்ஸ் ஆடும் வாய்ப்பு கிடைத்தது. இந்த நிகழ்ச்சி மூலம் தன்னுடைய டான்ஸ் திறமையை வெளிப்படுத்திய காயத்ரி, பின்னர் மெல்ல... மெல்ல.. சீரியல்களில் நடிக்க தொடங்கினார்.

கழண்டு விழும் ஓவர் கோட்... கண்டுகொள்ளாத ஸ்ருதி ஹாசன்! பொது இடத்தில் காதலனை கட்டி அணைத்து ரொமான்ஸ்! போட்டோஸ்

36

சன் டிவி தொலைக்காட்சியில் மிகவும் பிரபலமான 'தென்றல்' என்கிற சீரியலில், நிலா என்ற கதாபாத்திரத்தில் அறிமுகமாகி, திறமையான நடிப்பாலும், அழகாலும், ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். இதைத் தொடர்ந்து அடுத்தடுத்து பல சீரியல்களில் நடிக்க இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.

46

அதன்படி இவர் நடித்த சரவணன் மீனாட்சி, தாமரை, மோகினி, பிரியசகி, அழகி, பொன்னூஞ்சல், களத்து வீடு, மெல்ல திறந்தது கதவு, போன்ற சீரியல்கள் சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தன. தற்போது ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் 'மீனாட்சி பொண்ணுங்க' சீரியலிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

மாரி செல்வராஜ் மத மோதலை உருவாக்குகிறாரா? 'மாமன்னன்' படம் குறித்து தன்னுடைய கருத்தை கூறிய அமீர்!

56

அப்பாவி பெண், நாயகி, வில்லி, என எந்த கதாபாத்திரம் கொடுத்தாலும் பின்னி பெடல் எடுக்கும் காயத்ரி, பிரபல டான்சர் யுவராஜை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த ஜோடிக்கு தருண் என்கிற 12 வயது மகன் ஒருவனும் உள்ளார். அவ்வபோது காயத்ரி தன்னுடைய மகனுடன் சேர்ந்து சமூக வலைதளத்தில் போடும் ரீன்ஸ் மிகவும் பிரபலம்.

66

காயத்ரிக்கு  திருமணமாகி குழந்தை இருக்கிறதா? என கேட்க்கும் அளவுக்கு மிகவும் இளமையான தோற்றத்தில் இருக்கும் இவர்,  தற்போது இரண்டாவது குழந்தையை விரைவில் பெற்றெடுக்க போகும் தகவலை வெளியிட்டுள்ளார். காயத்ரி தற்போது 5 மாதம் கர்ப்பமாக இருப்பதாக, தன்னுடைய கணவர் யுவராஜுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருவதோடு, ரசிகர்களின் வாழ்த்துக்களையும் குவித்து வருகிறது.

டி.ஆர்.பி ரேட்டிங்கில் விஜய் டிவி சீரியல்களை தும்சம் செய்த சன் டிவி தொடர்கள்! டாப் 5 லிஸ்டில் ஒன்றுகூட இல்லை!

click me!

Recommended Stories