சன் மியூசிக்கில் தொகுப்பாளினியாக பணியாற்றி வந்த மணிமேகலை, குக் வித் கோமாளி நிகழ்ச்சி மூலம் தான் பேமஸ் ஆனார். அந்நிகழ்ச்சியின் கடந்த மூன்று சீசன்களாக ரசிகர்களின் மனம்கவர்ந்த கோமாளியாக இருந்து வந்த மணிமேகலை, தற்போது நடைபெற்று வரும் நான்காவது சீசனில் ஒரு சில எபிசோடுகள் மட்டும் கலந்துகொண்டார். பின்னர் திடீரென இந்நிகழ்ச்சியை விட்டு விலகுவதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார் மணிமேகலை.