ஆசை ஆசையாய் காதலித்து திருமணம் செஞ்சு.... ஆளவிடுடா சாமினு பாதியிலே விவாகரத்து செய்து பிரிந்த சீரியல் ஜோடிகள்

First Published | Jul 6, 2023, 3:37 PM IST

சீரியலில் ஜோடியாக நடித்த நடிகர், நடிகைகள் ரியல் லைஃப்பிலும் காதலித்து திருமணம் செய்து கொண்டாலும், சில பேர் விவாகரத்தும் செய்துள்ளனர். அவர்களின் லிஸ்ட் இதோ.

விஷ்ணுகாந்த் - சம்யுக்தா

விஷ்ணுகாந்த் சம்யுக்தா ஜோடிக்கு கடந்த மார்ச் மாதம் 3-ந் தேதி திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் இருவரும் சிப்பிக்குள் முத்து என்கிற சீரியலில் நடித்தபோது காதலித்தனர். பின்னர் திருமணம் செய்துகொண்ட இவர்கள் திருமணமான ஒரே மாதத்தில் சண்டை ஏற்பட்டு பிரிந்துவிட்டனர். இதையடுத்து இருவரும் தங்கள் வாழ்க்கையில் நடந்த அந்தரங்க விஷயங்களை பொதுவெளியில் பேசி ஒருவரை ஒருவர் அசிங்கப்படுத்தினர்.

ரச்சிதா - தினேஷ்

சீரியல் மூலம் அறிமுகமாகி காதல் திருமணம் செய்துகொண்ட ரச்சிதா - தினேஷ் ஜோடி. சில ஆண்டுகள் சந்தோஷமாக வாழ்ந்து வந்த நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக கணவரை பிரிந்து தனியாக வசித்து வருகிறார் ரச்சிதா. அண்மையில் கூட தினேஷ் தனக்கு ஆபாச மெசேஜ் அனுப்பி டார்ச்சர் செய்வதாக போலீசில் பரபரப்பை ஏற்படுத்தினார் ரச்சிதா.


திவ்யா ஸ்ரீதர் - அர்னவ்

செவ்வந்தி சீரியல் நடிகை திவ்யா ஸ்ரீதர், தன்னுடன் நடித்த சக நடிகரான அர்னவ்வை கடந்தாண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார். திவ்யா கர்ப்பமானதும் இவர்கள் இருவருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது அர்னவ் தன்னை அடித்து கருவை கலைக்க முயற்சிப்பதாக கூறி பரபரப்பு வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் திவ்யா. பின்னர் அர்னவ் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். தற்போது குழந்தை பிறந்த பின்னரும் இருவருக்கும் இடையேயான சண்டை ஓய்ந்தபாடில்லை.

இதையும் படியுங்கள்... கைலாசா அலப்பறைகள்... நித்யானந்தா கூடவே இருந்து பிரதமர் பதவி வாங்கிய ரஞ்சிதா

விக்னேஷ் - ஹரிப்பிரியா

எதிர்நீச்சல் சீரியல் நடிகை ஹரிப்பிரியா, விக்னேஷ் என்கிற சீரியல் நடிகரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். சில ஆண்டுகள் மட்டுமே சேர்ந்து வாழ்ந்த இந்த ஜோடி கருத்து வேறுபாடு ஏற்பட்டதன் காரணமாக விவாகரத்து செய்து பிரிந்துவிட்டனர்.

ஜெயஸ்ரீ - ஈஸ்வர்

ஈஸ்வர் மகாலட்சுமி கூட தொடர்பில் இருப்பதாக கூறி மிகப்பெரிய சர்ச்சை எழுந்ததை அடுத்து அவரை விவாகரத்து செய்து பிரிந்தார் ஜெயஸ்ரீ. ஆனால் இந்த சர்ச்சைகள் குறித்தெல்லாம் கவலைப்படாத மகாலட்சுமி ரவீந்தரை திருமணம் செய்துகொண்டு ஜாலியாக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்... சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது கே.வி.ஆனந்த் மகள் திருமணம் - படையெடுத்து வந்து வாழ்த்திய பிரபலங்கள்

Latest Videos

click me!