சினிமா பரிணாம வளர்ச்சி கண்டாலும் சின்னத்திரை சீரியல்களுக்கான மவுசு என்பது குறைந்தபாடில்லை. சொல்லப்போனால் முன்பை காட்டிலும் தற்போது தான் சீரியல்கள் அதிகளவில் பார்க்கப்பட்டு வருகின்றன. இதன் காரணமாக சீரியல்களில் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளன. முன்பெல்லாம் வாரத்தில் 5 நாட்கள் மட்டும் ஒளிபரப்பப்பட்டு வந்த சீரியல்கள் தற்போது வாரத்தின் 7 நாட்களும் ஒளிபரப்பாகும் அளவுக்கு அதன் மவுசு அதிகரித்துள்ளது.
சீரியல்களுக்கு மக்களிடம் எந்த அளவு வரவேற்பு கிடைக்கிறது என்பதை டிஆர்பி மூலம் கணக்கிடுவர். அந்த வகையில், தமிழில் அதிகபட்ச டிஆர்பி உடன் நம்பர் 1 இடத்தை பிடித்துள்ள சீரியல் எதிர்நீச்சல் தான். திருச்செல்வம் இயக்கியுள்ள இந்த சீரியல் கடந்த ஆண்டு தான் ஆரம்பிக்கப்பட்டது. தொடங்கப்பட்ட சில மாதங்களிலேயே பிக் அப் ஆக ஆரம்பித்த் இந்த சீரியல், இன்று நம்பர் 1 இடத்தை பிடித்துள்ளதற்கு முக்கிய காரணம் அதன் விறுவிறுப்பான கதைக்களமும், கச்சிதமான கதாபாத்திரங்களும் தான்.
இதையும் படியுங்கள்... தளபதி 68 அப்டேட் இதோ.. படத்தில் இணைந்த கேப்டன் மில்லர் பட கலைஞர் - குஷியில் ரசிகர்கள்!
எதிர்நீச்சல் சீரியலின் மூலம் மிகவும் பேமஸ் ஆனவர் அதில் ஆதி குணசேகரனாக நடித்து வரும் மாரிமுத்து தான். சினிமாவில் ஏராளமான படங்களில் நடித்தும் அவருக்கு கிடைத்திராத பெயரையும், புகழையும் இந்த சீரியல் பெற்றுத்தந்துள்ளது. இந்த சீரியலில் ஆதி குணசேகரனுக்கே டஃப் கொடுக்கும் வில்லன் என்றால் அது எஸ்.கே.ஆர் தான். அந்த கதாபாத்திரத்தில் வாசுதேவன் என்பவர் நடித்துள்ளார். அவர் நடிக்கும் முதல் சீரியல் இதுவாகும்.
எதிர்நீச்சல் சீரியலில் வில்லனாக மிரட்டி வரும் எஸ்.கே.ஆர், நிஜத்தில் ஒரு பிசினஸ்மேன் என்பது தான் பலரும் அறிந்திடாத ஒரு ஆச்சர்யமான விஷயமாகும். கேரளாவை சேர்ந்தவரான இவர் தனது நண்பர்களுடன் சேர்ந்து வெற்றிகரமாக பிசினஸ் நடத்தி வருகிறாராம். பிசினஸில் நன்கு சம்பாதித்தாலும், தன்னுள் இருக்கும் நடிப்புத்திறமையை எப்படியாவது வெளிப்படுத்த வேண்டும் என துடித்த வாசுதேவனுக்கு, இயக்குனர் திருச்செல்வத்தின் மூலம் தான் இந்த எதிர்நீச்சல் வாய்ப்பு கிடைத்துள்ளது. கிடைத்த முதல் வாய்ப்பையே நன்கு பயன்படுத்திக்கொண்ட வாசுதேவனுக்கு, அடுத்தடுத்து சீரியல்களில் நடிக்கும் வாய்ப்பு குவிந்து வருகிறதாம்.
இதையும் படியுங்கள்... வழக்கு தள்ளுபடி... சென்னை உயர்நீதிமன்ற உத்தரவால் தனுஷ், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் செம்ம ஹாப்பி