தொலைக்காட்சி சீரியல்களில் நம்பர் ஒன் இடத்தில் இருப்பது எதிர்நீச்சல் சீரியல் தான். திருச்செல்வம் இயக்கும் இந்த சீரியல் தொடங்கி ஓராண்டே ஆகும் நிலையில், இதற்கான மவுசு நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. இதற்கு காரணம் இந்த சீரியலில் விறுவிறுப்பான கதைக்களமும், அதில் நடிக்கும் நடிகர்களின் எதார்த்தமான நடிப்பு தான். தினந்தோறும் இரவு 9.30 மணிக்கு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.