பிக்பாஸ் நிகழ்ச்சியில், அலுங்காமல்... குலுங்காமல் விளையாடிய பிரபலம் என, விமர்சனங்களுக்கு ஆளானவர் ராம் ராமசாமி. இவர் மட்டும் கொஞ்சம் ஈடுபாட்டுடன்விளையாடி இருந்தால் கண்டிப்பாக பைனலுக்குள் சென்றிருக்கலாம். ஆனால் எந்நேரமும் தூங்கி வழிந்தபடி விளையாடியதால், 63 நாட்களில் பிக்பாஸ் வீட்டை விட்டு மூட்டையை கட்டினார்.