முடிவுக்கு வந்த பிரபல சன் டிவி தொடர்! புதிய தொடர் என்ன தெரியுமா?

First Published | Jul 24, 2023, 8:33 PM IST

சன் டிவி தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வந்த, முக்கிய தொடர் நிறைவடைந்த நிலையில் அந்த தொடரின் ரசிகர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 

சன் டிவியில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல், ஒளிபரப்பாகி வரும் 'திருமகள்' தொடர் தற்போது நிறைவடைந்துள்ளது. இதனால் இந்த சீரியலை விரும்பி பார்த்து வரும் ரசிகர்கள் சற்று அதிருப்தி அடைந்துள்ளனர். திங்கள் முதல் சனிக்கிழமை வரை, மதியம் 12:30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'திருமகள்'. இந்த தொடரில், ஹரிகா சாது கதாநாயகியாக, (அஞ்சலி) என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுரேந்தர் சண்முகம் (ராஜா) என்கிற கதாபாத்திரத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். மேலும்  பிரகாஷ் ராஜன், ஜானகி தேவி, தமிழ் ரித்விகா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள்.

சிறிய வயதிலேயே, ஜமீன் வீட்டு குழந்தையான அஞ்சலியை மருத்துவமனையிலேயே சிலர் சதி செய்து மாற்றி வைக்கிறார்கள். அவருக்கு பதில் ஆண் குழந்தை ராஜா தான் மாற்றி வைக்கப்படுகிறார். ராஜாவுக்கு ஜாதகத்தில் உள்ள தோஷத்தின் காரணமாக, ஏழ்மையான வீட்டில்  வளரும் அஞ்சலி ராஜாவுக்கு மனைவியாக வரும் சூழல் ஏற்படுகிறது. இந்த திருமணத்திற்கு பின்னர் அஞ்சலியை வீட்டை விட்டு வெளியேற்ற மாமியார் பல்வேறு வழிகளில் முயற்சி செய்கிறார். ஆனால் அது அனைத்தும் தோல்வியில் முடிகிறது. அஞ்சலி தன்னுடைய கணவரை விட்டு விலக மறுக்கிறார். கடைசியாக கணவருக்காக போராடி, வாழ்க்கையில் ஒன்று சேர்கிறார்.

இந்த மனசு தான் சார் கடவுள்! தன்னார்வ தொண்டு நிறுவன மூலம் 167 பள்ளிகளை தத்தெடுத்த பிரபல நடிகை.!

Tap to resize

ஜமீன் வீட்டு வாரிசு பிரச்சனை தலை தூக்க, ராஜா உண்மையான மகன் இல்லை என்பது தெரியவருகிறது. இன்னொருவர் நான் தான் ஜாமீன் வாரிசு என வர, உண்மையான ஜமீன் வாரிசான அஞ்சலிக்கு இந்த உண்மை ஒரு கடத்தில் தெரிய வருகிறது. ஆனால் இதை சொன்னால் யாரும் நம்ப மாட்டார்கள் என்பதால், அந்த விஷயத்தை மறைக்கப்பார்கிறார். அதே நேரம் சொத்துக்கள் தவறானவர்கள் கையிக்கு செல்ல கூடாத என்பதிலும் அஞ்சலி உறுதியாக இருக்கிறார்.

பின்னர் இந்த சீரியலில் 'அருந்ததி' படத்தில் காட்சிகள் எல்லாம் இடம்பெற்றது நெட்டிசன்களால் ட்ரோல் செய்யப்பட்டது. எனினும் பல ரசிகர்கள் இந்த சீரியலை விரும்பி பார்த்து வந்தனர். ஒரு வழியாக தற்போது அனைத்து பிரச்சினைகளும் முடிந்து, குடும்பத்தில் அனைவரும் ஒன்று சேர்ந்துள்ளனர். அஞ்சலி தான் ஜமீன் வீட்டு வாரிசு என்பதும் உறுதியாகி உள்ளது. 

விஜே பிரியங்காவிடம் இருந்து கணவருக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்? என்ன தான் பிரச்சனை.. உண்மையை உடைத்த பயில்வான்!

எனவே விரைவில் அஞ்சலிக்கும் - ராஜாவுக்கும் மீண்டும் திருமணத்தில் நடத்த குடும்பத்தினர் முயற்சி வருகின்றனர்.  இதற்கு எதிராக ஒரு தரப்பு திட்டம் தீட்டு ஒட்டுமொத்தமாக அனைவரையுமே பாம் வைத்து கொள்ள முயன்று வரும் நிலையில், வெற்றிகரமாக அணைத்து பிரச்சனைகளையும் கடந்து சீரியல் முடிவடைய உள்ளது.  கடந்த மூன்று ஆண்டுகளாக ஒளிபரப்பாகி வந்த சீரியல் நேற்றுடன் நிறைவடைந்துள்ளது. இந்த சீரியலில் விரும்பி பார்த்து வந்த ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.  மேலும் இன்று முதல் மீனா என்கிற புதிய தொடர் உருவாகி உள்ளது. தனித்தனியாக பிரிந்திருந்தால் சந்தோஷமான குடும்பமாகவும், ஒன்றாக சேர்ந்தால் அடித்து கொள்ளும் இரு குடும்பங்கள் மீனா என்கிற கதாபாத்திரத்தில் மூலம் ஒன்று சேர்வதை மையமாக வைத்து தான் இந்த தொடர் இன்று முதல் ஒளிபரப்பாகி வருகிறது.

Latest Videos

click me!