சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக... எதிர்நீச்சல் தொடரில் ஹிஜாப்புடன் நடிக்கும் முஸ்லிம் நடிகை!

First Published | Jul 26, 2023, 3:13 PM IST

சீரியல் வரலாற்றிலும், தேசிய அளவிலும் முதல் முறையாக ஹிஜாப் அணிந்து நடித்து வரும் முதல் முஸ்லீம் நடிகை என்கிற பெருமையை, 'எதிர்நீச்சல்' தொடரில் நடித்து வரும் ஸீபா ஷெரின் பெற்றுள்ளார்.
 

சன் டிவி தொலைக்காட்சியில், 'பிரைன் டைமில்' ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று 'எதிர்நீச்சல்' சீரியல். இல்லத்தரசிகள் முதல் இளைஞர்கள் வரை அனைத்து தரப்பு ரசிகர்கள் மத்தியிலும் தொடர்ந்து நல்ல ஆதரவை பெற்று வரும் இந்த சீரியலுக்கு, நாளுக்கு நாள் ரசிகர்கள் கூட்டம் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. 
 

இந்த தொடர் முதலில், திங்கள் முதல் சனிக்கிழமை வரை ஒளிபரப்பாகி வந்த நிலையில்... கடந்த ஓரிரு வாரங்களாக ஞாயிற்றுக்கிழமையிலும் ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த சீரியலை தொடர்ந்து பார்த்து வரும் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர். இந்த தொடரை, இயக்குனர் திருசெல்வம் இயக்கி வருகிறார்.

2 நாள் சாப்பிட கூட காசு இல்லாமல் பட வாய்ப்பு தேடிய... சூரியின் இன்றைய சொத்து மதிப்பு எத்தனை கோடி தெரியுமா?

Tap to resize

பிறந்த வீட்டில் சுதந்திரமாக வளர்க்கப்பட்டு, நன்கு படித்த பெண்கள் வசதி படைத்த வீட்டிற்கு திருமணமாகி வந்தாலும், ஆணாதிக்கத்தால் அடிமைப்படுத்தப்படும் நிலையில்...  அதற்கு எதிராக குரல் கொடுக்கும் விதமாக இந்த சீரியல் எடுக்கப்பட்டு வருகிறது. டிஆர்பி-யில் ஒவ்வொரு வாரமும், முதல் இடத்தை கைப்பற்றி வரும் இந்த சீரியல் குறித்த, வியக்க வைக்கும் தகவல் ஒன்று வெளியாகி உள்ளது.

இயக்குனர் திருச்செல்வம் நடித்து வரும் ஜீவானந்தம் கதாபாத்திரத்திற்கு, உதவியாளராக பர்ஹானா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ஸீபா ஷெரின். இவரை எதிர்நீச்சல் சீரியலுக்காக பரிந்துரை செய்தவர் எதிர்நீச்சல் தொடரில் நடித்து வரும் வைஷ்ணவி தானாம். ஆடிஷனில் நன்றாக பர்ஃபார்ம் செய்ததால், அவரையே பர்ஹானா கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முடிவு செய்துள்ளார் இயக்குனர் திருச்செல்வம். எனினும் பர்ஹானா முக்கிய கண்டிஷன் ஒன்றையும் போட்டுள்ளார். அதாவது திரையில் ஹிஜாப் அணிந்தவாறு தான் நடிப்பை என கூற, இதற்கு திருச்செல்வமும் சம்மதம் தெரிவித்துள்ளார்.

விலகி ஓடிய தனுஷ்... வெறித்தனமாக காதலித்த திருமணமான பாடகி! படு பயங்கரமான தகவலை வெளியிட்ட பயில்வான்!

ஸீபா ஷெரின் தொடர்ந்து, ஹிஜாப் அணிந்து நடித்து வருவதால், தேசிய அளவில் தொலைக்காட்சி தொடர் ஒன்றிலும், சீரியல் வரலாற்றிலும், முஸ்லிம் நடிகை ஒருவர் ஹிஜாப் அணிந்து நடித்து வருவது இதுவே முதல் முறை என்பதால் இதற்கு பலரும் தங்களுடைய பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் ஆங்கில ஊடகங்களும் இதனை உற்று நோக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!