விஜய் டிவி பிரபலம் நாஞ்சில் விஜயனின் வருங்கால மனைவி யார் தெரியுமா? வெளியான தகவல்!

First Published | Jul 27, 2023, 2:59 PM IST

விஜய் டிவி தொலைக்காட்சியின் மூலம் பிரபலமான, ஸ்டாண்ட் அப் காமெடியன் நாஞ்சில் விஜயன், இவரின் திருமணம் செப்டம்பர் மாதம் நடைபெற உள்ள நிலையில், இவரை திருமணம் செய்து கொள்ள உள்ள, பெண் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.

விஜய் டிவி தொலைக்காட்சியில், ரசிகர்களின் மனம் கவர்ந்த காமெடி ரியாலிட்டி ஷோக்களான 'அது இது எது', 'கலக்கப்போவது யாரு' போன்ற நிகழ்ச்சிகளில் பெருபாலும் பெண், கெட்டப்பில் தோன்றி பல ரசிகர்களையும், பிரபலங்களையும் சிரிக்க வைத்தவர் நாஞ்சில் விஜயன்.
 

அதே போல் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான 'வள்ளி திருமணம்' என்கிற தொடரிலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். சொந்தமாக யூடியூப் சேனல் ஒன்றையும் நடத்தி வரும் நாஞ்சில் விஜயன், அதன் மூலம் பல பிரபலங்களை பேட்டி கண்டு வருகிறார். சர்ச்சைக்கு விதமாக பேசி வசமாக சிக்கி கொள்வதும் இவருக்கு கை வந்த கலை.

ஹீரோயினை போல் இருக்கும் மகளுடன்... மாடர்ன் ட்ரெஸில் கலக்கும் சரண்யா பொன்வண்ணன்! வைரல் போட்டோஸ்!
 

Tap to resize

வனிதாவின் மூன்றாவது திருமண விவகாரம் முதல்... ஐபிஎல் கிரிக்கெட் பிளாக் டிக்கெட் விற்பனை என, இவர் மீது பல பிளாக் மார்க்ஸ் உள்ளது. இந்நிலையில் கடந்த மாதம் இவருக்கு திடீர் என, மிகவும் எளிமையான முறையில் வீட்டிலேயே திருமண நிச்சயதார்த்தம் நடந்த புகைப்படங்கள் சிலவற்றை, சமூக வலைத்தளத்தில் இவர் பகிர, பலர் தங்களின் வாழ்த்துக்களை தெரிவித்து வந்தனர்.

இவரின் திருமண நிச்சயதார்த்தத்தில், நெருங்கிய குடும்பத்தினர் மற்றும் தொலைக்காட்சி நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்ட நிலையில், திருமணம் செய்துகொள்ள உள்ள பெண் யார் என்பதை மட்டும் அவர் வெளிப்படுத்தவில்லை.  தற்போது நாஞ்சில் விஜயன் திருமணம் செய்து கொள்ள உள்ள பெண் யார் என்பது குறித்த தகவல் வெளியாகியுள்ளது. ஆதாவது நாஞ்சில் விஜயனுக்கு அவரின் நண்பர் மூலம் அறிமுகமான பெண் ஒருவருடன், காதல் ஏற்பட்டுள்ளது. இந்த உறவு... தற்போது குடும்பத்தினர் சம்மதத்துடன் திருமணம் வரை வந்துள்ளதாம்.

சீரியல் வரலாற்றிலேயே முதல் முறையாக... எதிர்நீச்சல் தொடரில் ஹிஜாப்புடன் நடிக்கும் முஸ்லிம் நடிகை!

நாஞ்சில் விஜயன் திருமணம், செப்டம்பர் மாதம் 3 ஆம் தேதி, சென்னை ECR சாலையில் உள்ள திருமண மண்டபத்தில் பிரமாண்டமாக நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இவரின் திருமணத்தில், சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை பிரபலங்கள் பலர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

click me!