வீரமங்கை வேலுநாச்சியாராக மாறிய எதிர்நீச்சல் ஜான்சி ராணி! கையில் அம்பு - கேடயம் வைத்து மிரட்டல் போஸ்!

First Published | Jul 31, 2023, 4:07 PM IST

எதிர்நீச்சல் சீரியலில், கரிகாலனுக்கு அம்மாவாக செம்ம கெத்தான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஜான்சி ராணி சமீபத்தில் கலந்து கொண்ட ஃபேஷன் நிகழ்ச்சி ஒன்றில் எடுத்துக்கொண்ட புகைப்படம் வைரலாகி வருகிறது.
 

இயக்குனர் திருச்செல்வம் இயக்கத்தில், சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் 'எதிர்நீச்சல்'. படித்த பெண்களை திருமணம் செய்து வீட்டிற்கு அழைத்து வந்து, அவர்களை வீட்டிற்குள்ளேயே அடிமைத்தனமாக வைத்திருக்கும் அதி குணசேகரனுக்கு எதிராக, அந்த வீட்டிற்கு வரும் கடைசி மருமகள் தன்னுடைய எதிர்ப்பை தெரிவிக்கிறார்.

அவருக்கு எதிராக குணசேகரன் பல சதிகளை செய்து ஜனனியை வீட்டை விட்டு வெளியேற்றிய  நிலையில், மீண்டும் அப்பத்தாவின் உதவியுடன் ஜனனி வீட்டிற்குள் அடியெடுத்து வைக்கிறார். இதற்க்கு பின்னர் தான் 'எதிர்நீச்சல்' சீரியல் சூடு பிடிக்க துவங்கியது.

சபாஷ்... ஆண்களுக்கு செம்ம நோஸ் கட் கொடுத்த ரேணுகா..! ஜீவனந்தத்துக்கு எதிராக குணசேகரன் போடும் மாஸ்டர் பிளான்!

Tap to resize

தற்போது விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கும் சீரியலில், சமீபத்தில் இணைந்தவர் தான் ஜான்சி ராணி. மூர்க்கமான கதாபாத்திரத்தால், மிக குறுகிய நாட்களிலேயே ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார்.

ஜான்சி ராணி, கரிகாலனின் அம்மா வேடத்தில் நடித்து வருகிறார். அதாவது ஒரு வகையில் குணசேகரனுக்கு சொந்தம். ஆதிரையை தன்னுடைய மகனுக்கு திருமணம் செய்து வைக்க இவர் போட்ட ஆட்டம் கொஞ்சம் நஞ்சமில்லை.

வெளிநாட்டில் வெகேஷன்... கொண்டாட்டத்தில் பாண்டியன் ஸ்டோர் பிரபலம்! வைரலாகும் போட்டோஸ்!

அதே போல், அனைவரையும் மிரட்டிக்கொண்டு திரியும் குணசேகரனையே... மிரட்டும் கதாபாத்திரம் என்றால் ஜான்சி ராணியை சொல்லலாம். இவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தான் தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

சென்னையில் நடந்த ஃபேஷன் நிகழ்ச்சியில்... வீரமங்கை வேலுநாச்சியாராக   வேடமிட்டு காயத்ரி கிருஷ்ணா கலந்து கொண்டுள்ளார். இதுகுறித்த புகைப்படங்களை அவர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

டூ மச் கவர்ச்சி... உள்ளாடை போடாமல் கோட் அணிந்து மோசமான கிளாமரில் காஜல்! ஷாக்காக்கிய போட்டோஸ்!

காயத்ரி கிருஷ்ணன்.. சீரியலில், வாயில் வெற்றிலை பாக்கு, பரட்டை தலையுடன் நடித்தாலும்... உண்மையில் செம்ம மாடர்ன் பொண்ணு. விஜே-வாக தன்னுடைய கேரியரை துவங்கிய இவர், மாடலிங் செய்து வருகிறார். ஆனால் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றால் அது எதிர்நீச்சல் சீரியல் தான். தற்போது அடுத்தடுத்து பல திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!