எஸ்.ஏ.சி-ன் 'கிழக்கு வாசல்' சீரியலுக்கு நாள் குறிச்சாச்சு! சூப்பர் ஹிட் தொடருக்கு முடிவு கட்டிய விஜய் டிவி!

First Published | Jul 31, 2023, 9:27 PM IST

TRP-யில் குறைவான புள்ளிகளை பெற்றாலும், ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற முக்கிய தொடர் ஒன்றை, அதிரடியாக விஜய் டிவி நிறுத்திவிட்டு புதிய தொடரை களம் இறக்க உள்ளது.  இது குறித்த லேட்டஸ்ட் தகவல் தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.
 

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு, இல்லத்தரசிகள் மட்டுமின்றி பல இளைஞர்களும் ரசிகர்களாக உள்ளனர். ஆனால் எல்லா சீரியல்களுக்குமே ஒரே மாதிரியான வரவேற்பு கிடைக்கிறதா? என்றால் அது சந்தேகமே.  கடந்த ஆண்டு நிறைவடைந்த சூப்பர் ஹிட் சீரியலான 'பாரதி கண்ணம்மா' சீரியலின் இரண்டாம் பாகம், சமீபத்தில் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஒளிபரப்பானது.
 

ஆனால் இந்த  தொடரின் முதல் பாகத்திற்கு கிடைத்த வரவேற்பு இரண்டாம் பாகத்திற்கு கிடைக்கவில்லை. இந்த தொடரில் முதல் பாகத்தில் நடித்திருந்த வினுஷா ஹீரோயினாக நடிக்க, சன் டிவியில் ஒளிபரப்பான ரோஜா தொடர் மூலம் பிரபலமான சிபு சூரியன் நடித்திருந்தார். இந்த தொடருக்கு ஒரு தரப்பு ரசிகர்கள் மத்தியில் ஆதரவு கிடைத்து வந்த போதிலும், TRP-யில் படுமோசமாக அடி வாங்கியதால்... இந்த தொடரை அதிரடியாக நிறுத்திவிட்டு புதிய தொடரை ஒளிபரப்ப தயாராகியுள்ளது விஜய் டிவி.

அச்சச்சோ... விபத்தில் சிக்கிய குக் வித் கோமாளி பவித்ரா..! என்ன ஆச்சு? அதிர்ச்சி தகவல்..!
 

Tap to resize

தளபதி விஜயின் தந்தை, எஸ்.ஏ.சி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் 'கிழக்கு வாசல்' தொடர் குறித்து ஏற்கனவே தகவல் வெளியான நிலையில்,  இந்த சீரியல் ஆகஸ்ட் 7 ஆம் தேதி முதல், இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளதாக தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது. பாரதி கண்ணம்மா 2 சீரியலுக்கு பதில் இந்த தொடர் திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

இந்த சீரியலுக்கு கிரியேட்டிவ் டைரக்டராக ராதிகா சரத்குமார் செயல்படுகிறார். மேலும் ஜீ தமிழ் தொலைக்காட்சிகள் நடித்து பிரபலமான ரேஷ்மா முரளிதரன் கதாநாயகியாக நடிக்க அவருக்கு ஜோடியாக பாண்டியன் ஸ்டோர்ஸ் வெங்கட் ரங்கநாதன் நடிக்கிறார்.  மேலும் ஜானகி சுரேஷ், அஷ்வினி, சிந்து ஷியாம் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். புதிய சீரியலுக்காக திடீர் என 'பாரதி கண்ணம்மா 2' தொடரை நிறுத்தியது... அந்த சீரியலை விரும்பி பார்த்து வந்த ரசிகர்களை வருத்தமடைய செய்துள்ளது.

Baakiyalakshmi Serial: மகள் இனியாவுக்கு போட்டியாக பாக்கியா எடுத்த முடிவு? செம்ம ஷாக்கில் கோபி..!

Latest Videos

click me!