பாக்யா முதல் கண்ணம்மா வரை... விஜய் டிவி சீரியல் நடிகைகளின் வியக்க வைக்கும் சம்பள விவரம் - முதலிடத்தில் இவரா?

First Published | Aug 2, 2023, 9:48 AM IST

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பேமஸ் ஆன நடிகைகளின் சம்பள விவரம் பற்றி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

சினிமா நடிகைகளைப் போல் சீரியல் நடிகைகளும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகின்றனர். அதுமட்டுமின்றி சமூக வலைதளங்களிலும் சீரியல் நடிகைகள் ஆக்டிவாக இருப்பதால் அவர்களுக்கான ரசிகர் பட்டாளமும் விரிவடைந்து வருகிறது. சீரியலை விரும்பி பார்க்கும் ரசிகர்களில் அதில் நடிக்கும், நடிகர், நடிகைகள் பற்றிய விவரங்களையும் தெரிந்துகொள்ள ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் விஜய் டிவி சீரியல் நடிகைகளின் சம்பள விவரம் பற்றி தற்போது பார்க்கலாம்.

ரேஷ்மா பசுபுலேட்டி

பாக்கியலட்சுமி சீரியலில் ராதிகா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் ரேஷ்மா பசுபுலேட்டி. இவர் சினிமாவிலும் அவ்வப்போது நடித்து வருகிறார். குறிப்பாக இவர் வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் திரைப்படத்தில் புஷ்பா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பேமஸ் ஆனார். இவர் பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.7 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம்.


வினுஷா தேவி

பாரதி கண்ணம்மா சீரியலில் நாயகியாக நடித்து வருபவர் வினுஷா தேவி. வினுஷா என்று சொல்வதைவிட இவரை கண்ணம்மா என்று சொன்னால் தான் அனைவருக்கும் தெரியும் அந்த அளவுக்கு அந்த சீரியல் கதாபாத்திரம் இவரை பேமஸ் ஆக்கிவிட்டது. இவர் ஒரு நாளைக்கு ரூ.8 ஆயிரம் சம்பளமாக வாங்கி வருகிறாராம்.

இதையும் படியுங்கள்... 1500 ரூபாயில் துவங்கி.. இன்று எதிர்நீச்சல் சீரியலுக்கு மட்டும் மாரிமுத்து வாங்கும் சம்பளம் எவ்வளவு தெரியுமா?

நக்‌ஷத்ரா நாகேஷ்

தமிழும் சரஸ்வதியும் தொடரின் மூலம் சீரியல் ஹீரோயினாக அறிமுகமாகி இருப்பவர் நக்‌ஷத்ரா நாகேஷ். விஜே-வாக பணியாற்றி வந்த நக்‌ஷத்ரா தற்போது முழுநேர நடிகையாகிவிட்டார். இவர் தமிழும் சரஸ்வதியும் தொடரில் தீபக்கிற்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த தொடரில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம் நக்‌ஷத்ரா.

சுசித்ரா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களில் அதிகளவிலான டிஆர்பியை பெற்று முதலிடத்தில் இருக்கும் சீரியல் என்றால் அது பாக்கியலட்சுமி தான். இந்த சீரியலில் பாக்யாவாக நடித்து வரும் நடிகை சுசித்ரா, ஒரு நாளைக்கு ரூ.12 ஆயிரம் சம்பளமாக வாங்குகிறாராம். அந்த தொடரில் நடிக்கும் பிரபலங்களில் இவருக்கு தான் அதிக சம்பளமாம்.

சுஜிதா தனுஷ்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பேமஸ் ஆன சீரியல்களில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலும் ஒன்று. இந்த சீரியலில் மூர்த்தி கதாபாத்திரத்திற்கு ஜோடியாக தனம் என்கிற கேரக்டரில் நடித்து வருகிறார் சுஜிதா தனுஷ். இதன் தெலுங்கு வெர்ஷனிலும் இவர் தான் நடித்து வருகிறார். இதனால் இவருக்கு ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக வழங்கப்படுகிறதாம். விஜய் டிவி சீரியல் நடிகைகளில் அதிகம் சம்பளம் வாங்கும் நடிகை சுஜிதா தான்.

இதையும் படியுங்கள்... திருமண அறிவிப்பை வெளியிட்ட கவின்... முன்னாள் காதலி லாஸ்லியாவின் ரியாக்‌ஷன் என்ன தெரியுமா?

Latest Videos

click me!