'எதிர்நீச்சல்' சீரியல் தற்போது எதிர்பார்க்காத பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. அந்த வகையில் இந்த வாரம் முழுவதும், ஜீவானந்தம் யார் என்பதை தெரிந்து கொள்வதற்காக ஒரு பக்கம் ஜனனியும், மற்றொரு பக்கம் குணசேகரனும், தங்களுக்கு தெரிந்தவர்களிடம் பரபரப்பாக விசாரிப்பதில் ஆர்வம் காட்டும் காட்சிகள் இடம்பெற்று வருகிறது. குறிப்பாக அப்பத்தாவின் சொத்தை ஆக்கிரமித்த ஜீவானந்தம் மீது குணசேகரன் கொலை வெறியில் உள்ளார்.