30 வயதில் மாரடைப்பு... மரணத்தை அன்றே கணித்தாரா சீரியல் நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர்?

First Published | Aug 4, 2023, 11:04 AM IST

சீரியல் நடிகை ஸ்ருதி சண்முக பிரியாவின் கணவர் மாரடைப்பால் மரணமடைந்த நிலையில், அவரின் பழைய இன்ஸ்டா பதிவு ஒன்று வைரலாகி வருகிறது.

sruthi shanmuga priya

திருமுருகன் இயக்கத்தில் சன் டிவியில் ஒளிபரப்பாகி பிளாக்பஸ்டர் ஹிட் ஆன நாதஸ்வரம் சீரியல் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஸ்ருதி சண்முகப்பிரியா. அந்த சீரியலில் கோபியின் நான்கு தங்கைகளில் ஒருவராக நடித்திருந்தார் ஸ்ருதி. நாதஸ்வரம் சீரியலை தொடர்ந்து கல்யாணப் பரிசு, வாணி ராணி, பாரதி கண்ணம்மா போன்ற ஹிட் சீரியல்களில் நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானார் ஸ்ருதி. இவருக்கு கடந்தாண்டு திருமணம் நடைபெற்றது.

sruthi shanmuga priya

கோவையை சேர்ந்தவரான ஸ்ருதி, அரவிந்த் சேகர் என்கிற ஜிம் டிரெய்னரை திருமணம் செய்துகொண்டார். உடற்பயிற்சி செய்வதில் அதீத ஆர்வம் கொண்டவரான அரவிந்த் சேகர், கடந்த ஆண்டு மிஸ்டர் தமிழ்நாடு பட்டத்தை வென்றவர் ஆவார். திருமணத்துக்கு பின்னர் இவர்கள் இருவரும் சென்னை வளசரவாக்கத்தில் உள்ள வீட்டில் சந்தோஷமாக வாழ்ந்து வந்தனர். குறிப்பாக இவர்கள் ஜோடியாக பதிவிடும் ரீல்ஸ் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.


sruthi shanmuga priya

இப்படி ஜாலியாக சென்றுகொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கை ஓராண்டில் முடிவுக்கு வந்துள்ளது. நடிகை ஸ்ருதி சண்முகப்பிரியாவின் கணவர் அரவிந்த் சேகர் கடந்த ஆக்ஸ்ட் 2-ந் தேதி திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மரணமடைந்துள்ளார். 30 வயதிலேயே அவர் மரணமடைந்துள்ளது அவரது குடும்பத்தினரை பேரதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. அரவிந்த் சேகரின் மறைவை தொடர்ந்து பிரபலங்கள் பலரும் நடிகை ஸ்ருதிக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... 'பிரிந்தது உடல் தான்'... ரொமான்டிக் புகைப்படத்துடன் இறந்த கணவர் குறித்து ஸ்ருதி ஷண்முக பிரியா போட்ட பதிவு!

sruthi shanmuga priya

மறைந்த தன் கணவர் குறித்து இன்ஸ்டாவில் பதிவிட்டிருந்த ஸ்ருதி, உன் உடல் மட்டும் தான் என்னைவிட்டு பிரிந்து சென்றுள்ளது. ஆனால் உன்னுடைய ஆன்மாவும், மனமும் எப்போதும் என்னுடனே இருக்கும் என் காதலே. உன்மேல் உள்ள காதல் இப்போது தான் மேலும் மேலும் அதிகரிக்க தொடங்கி உள்ளது. மிஸ் யூ. நீ என் அருகில் இருப்பது போல் உணர்கிறேன்” என உருக்கமாக பதிவிட்டு இருந்தார் ஸ்ருதி.

Arvind Shekar Insta Post

இது ஒருபுறம் இருக்க, அரவிந்த் சேகரின் பழைய இன்ஸ்டா பதிவு ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. சில வாரங்களுக்கு முன்னர் பாரிஸில் எடுத்த வீடியோ ஒன்றை பதிவிட்டு, “நல்ல நினைவுகளோடு இறக்க வேண்டும்... நிறைவேறாத கனவுகளோடு அல்ல” என குறிப்பிட்டு இருந்தார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் அவர் மரணத்தை முன்பே கணித்துள்ளதாக சோகத்தோடு பதிவிட்டு வருகின்றனர்.

இதையும் படியுங்கள்... திருமணமான ஒரே வருடத்தில்... பாரதி கண்ணம்மா சீரியல் நடிகையின் கணவர் அதிர்ச்சி மரணம்!

Latest Videos

click me!