ஏற்கனவே ரசிகர்கள் பலரும் ஜீவானந்தம் ஈஸ்வரியின் காதலராக இருக்கலாம் என கூறிவந்த நிலையில், இதனை உறுதி படுத்துவது போல் தற்போது புதிய புரோமோ வெளியாகியுள்ளது. ஈஸ்வரி... ஜீவனந்தத்திற்கு போன் செய்து, நான் குணசேகரன் மனைவி ஈஸ்வரி பேசுகிறேன் என கூற, அதற்க்கு ஜீவானந்தம், நீங்க குணசேகரன் மனைவி என்பதால் நான் பேசவில்லை, ஈஸ்வரி என்பதால் பேசுகிறேன் என கூறுகிறார். ஈஸ்வரியும் ஏதோ யோசனையோடு போனை பார்ப்பதால், தன்னுடைய பழைய காதலன் தான் ஜீவானந்தம் என்பதை கண்டுபிடித்து விட்டார் என்றே நினைக்க தோன்றுகிறது.