அட்ஜஸ்ட்மென்ட் டார்ச்சர் இப்படி தான் நடந்துருக்கு! விஜய் டிவி சீரியல் நடிகையிடம் நடுரோட்டில் அடிவாங்கிய நபர்?

First Published | Aug 7, 2023, 5:16 PM IST

தமிழில் பல சீரியல்களில் நடித்து வரும், நடிகை மீனா வேமுரி தனக்கு நடந்த அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை மற்றும் உயிர் பயம் காட்டிய ஒருவரை, நடு ரோட்டிலேயே அடித்தது குறித்து சமீபத்திய பேட்டி ஒன்று தெரிவித்துள்ளார்.

சன் டிவியில் ஒளிபரப்பான நந்தினி தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான நடிகை மீனா வேமுரி,  தற்போது 'இலக்கியா' தொடரிலும், விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் 'ஈரமான ரோஜாவே 2' சீரியலிலும் நடித்து வருகிறார். இவர் சமீபத்தில் youtube தளம் ஒன்றிற்கு கொடுத்த பேட்டி, தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

இதில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த பல்வேறு விஷயங்களை மீனா பகிர்ந்து கொண்டுள்ளார். ஆரம்பத்தில் பிசினஸ் செய்து கொண்டிருந்த இவர், அதில் இருந்து விலகி சீரியலில் நடிக்க துவங்கினார். கடந்த எட்டு ஆண்டுகளாக பல சீரியல்கள் மற்றும் திரைப்படங்களில் நடித்து வருகிறார். சீரியலில் சீரியஸான மாமியாராக இருக்கும் இவர், நிஜத்தில் மிகவும் ஜாலியான நபராம். பொதுவாக இவருக்கு கோபமே வராதாம். ஷூட்டிங் ஸ்பாட்டில் கூட குழந்தை போல் அனைவரிடமும் அரட்டை அடித்து தான் இருப்பாராம்.

Tap to resize

இவரிடம் தொகுப்பாளர் அட்ஜஸ்ட்மெண்ட் பிரச்சினை குறித்து கேள்வி எழுப்பிய நிலையில், இதுவரை நேரடியாக யாரும் என்னிடம் அட்ஜஸ்ட்மென்ட் குறித்து பேசியது இல்லை. ஆனால் சிலர் போன் செய்து பட வாய்ப்பு குறித்து பேசியதும்,  ஆனால் என்று இழுக்கும் போதே... நான் அவர்களை ஆப் செய்து விடுவேன்.  இந்த மாதிரி  அட்ஜஸ்ட்மென்ட் பண்ணனும்னா என்கிட்ட பேசாதீங்க என கூறி விடுவேன். உடனே அவர்களும் அப்படி எல்லாம் இல்ல மேடம், உங்களுக்கு கால் பண்றேன் என சொல்லிட்டு கால் கட் பண்ணிடுவாங்க அதுக்கப்புறம் போனே வராது என தெரிவித்தார்.

மேலும் ஒருவரை நடு ரோட்டிலேயே அடித்தது குறித்தும் பேசி உள்ளார் மீனா வேமுரி. காரில் சென்று கொண்டிருக்கும், காரை நான் திருப்பியது சரி இல்லை என்பதால்... என்னை ஓவர் டேக் செய்து இடிப்பது போல் நிறுத்தினார். பின்னர் காரில் இருந்து இறங்கி சென்று அவர் கன்னத்தில் பளார் பளார் என அறைந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்தினேன். பின்னர் அங்கிருந்தவர்கள் அந்த மனிதரை போக சொல்லி விட்டார்கள். ஆனால் நான் போலீசுக்கு செல்லவேண்டும் என வற்புறுத்தினேன். ஆனால் இது ஒரு பிரச்சனையே இல்லை, யாருக்கும் எந்த சேதமும் இல்லை... இதை பெரிது படுத்த வேண்டாம் என அங்கு இருப்பவர்கள் நினைத்தார்கள். அவன் எனக்கு உயிர் பயம் காட்டியதால் இப்படி செய்தேன் என கூறியுள்ளார்.

Latest Videos

click me!