சுதந்திர தின ஸ்பெஷலா.. லுங்கியை இழுத்து சொருகியது போன்ற கவர்ச்சி உடையில் அதகளம் பண்ணும் சமந்தா! ஹாட் கிளிக்ஸ்
நடிகை சமந்தா வெள்ளை நிற மாடர்ன் உடையில், விதவிதமாக போஸ் கொடுத்து வெளியிட்டுள்ள லேட்டஸ்ட் புகைப்படங்கள் தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
மயோசிட்டிஸ் பிரச்சனையில் இருந்து முழுமையாக மீண்டு வருவதற்காக தற்போது, சினிமாவில் இருந்து தற்காலிகமாக, நடிகை சமந்தா விலகி இருப்பதாக கூறப்படும் நிலையில்... இவர் சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியிட்டுள்ள புகைப்படங்கள் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
நடிகர் நாக சைதன்யா உடனான விவாகரத்துக்கு பின்னர், மனதளவில் ஒரு பக்கம் சமந்தா, மிகப்பெரிய வலியை சந்தித்த நிலையில், மற்றொரு புறம் திடீர் என ஏற்பட்ட மயோசிட்டிஸ் பிரச்சனை காரணமாக உடல் அளவிலும் வலி வேதனைகளுக்கு ஆளானார்.
ஆரம்ப பள்ளியில்.. குழந்தைகளுடன் சுதந்திர தினத்தை கொண்டாடிய விஷால்!
ஒரு நிலையில் எழுந்து கூட நிற்க முடியாமல் சமந்தா அவதிப்பட்ட நிலையில், சாகுந்தலம் படத்தின் டப்பிங் பணியை கூட, கையில் ட்ரிப்ஸ் ஏறிக்கொண்டிருக்கும் நிலையில் தான் மேற்கொண்டார். இவரின் பிரச்சனை குறித்த தகவல் வெளியான போது ரசிகர்கள் பலர் இவருக்கு தொடர்ந்து ஆறுதல் கூறி வந்தது மட்டும் இன்றி, விரைவில் இந்த பிரச்சனையில் இருந்து மீண்டு வர தங்களின் பிரார்த்தனைகளையும் முன் வைத்தனர்.
இந்தியாவில் மேற்கொண்ட சிகிச்சையில் இவரின் உடல் நிலையில் எதிர்பார்த்த அளவுக்கு முன்னேற்றம் இல்லாத காரணத்தால், அமெரிக்காவுக்கு சென்று சிகிச்சை பெற்றார். மிக விரைவாகவே உடல்நலம் தேறி, சாகுந்தலம் படத்தின், இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு ஆச்சர்யப்படுத்தினார்.
Jailer OTT: வசூலில் மிரட்டி வரும் ரஜினிகாந்தின் 'ஜெயிலர்' ஓடிடி ரிலீஸ் தேதி இதுவா? கசிந்தது தகவல்!
இதை தொடர்ந்து அடுத்தடுத்து, இவரின் கைவசம் இருந்த குஷி மாற்று, சிட்டாடல் ஆகிய வெப் தொடரில் நடித்து முடித்த சமந்தா, ஆன்மீக சுற்றுலா மற்றும் வெளிநாட்டில் நண்பர்களுடன் வெகேஷனை என்ஜோய் செய்து வருகிறார்.
அதாவது எவ்வளவு தான் உடலில் உள்ள நோயை சரி செய்ய மருந்துகள் எடுத்து கொண்டாலும், அதை விட முக்கியம், முழுமையான ஓய்வு, மன அமைதி மற்றும் சந்தோஷமாக வைத்து கொள்வது. இதற்காக தான் சமந்தா, தற்போது திரையுலகி இருந்து விலகி சில நாட்கள், மகிழ்ச்சியான இடங்களில் தன்னுடைய நண்பர்களுடன் பொழுதை கழிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
அவ்வப்போது தன்னுடைய புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் வெளியிடுவதை வழக்கமாக வைத்துள்ள சமந்தா, தற்போது வெள்ளை நிற மாடர்ன் உடையில் சில புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். அதே போல், ஜீப்ரா மாடலில்... லுங்கி போல் இருக்கும் வேற லெவல் கவர்ச்சி உடையில் எடுத்து கொண்ட சில புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்.
இவர் சுதந்திர தினதை முன்னிட்டு வெளியிட்டுள்ள இந்த ஹாட் போட்டோஸ், ரசிகர்கள் மத்தியில் அதிகம் பார்க்கப்பட்டு லைக்குகளை குவித்து வருகிறது.