பாக்கிய லட்சுமிக்கு மறுமணம்? பெண் கேட்க தயாரான பழனிச்சாமி அம்மா! இது தெரிஞ்சா கோபிக்கு நெஞ்சே வெடிச்சிடுமே!

First Published | Aug 14, 2023, 6:07 PM IST

'பாக்கிய லட்சுமி' சீரியலில் பழனிச்சாமியின் அம்மா அவருக்கு பாக்கியாவைப் பெண் கேட்டு போகலாமா என? பழனிச்சாமியிடமே பேசிக் கொண்டிருப்பது இந்த சீரியலின் புது திருப்பமாக அமைந்துள்ளது.
 

விஜய் டிவி தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர் பாக்கியலட்சுமி. கணவரால் எதற்குமே பிரயோஜனம் இல்லை என, எந்நேரமும் மட்டம் தட்டப்படும் பாக்யா தற்போது என்னுடைய சமையல் திறமையால், கேட்டரிங் எடுத்து நடத்தும் அளவுக்கும், சமையல் ஆர்டர்கள் எடுத்து அதை வெற்றிகரமாக செய்து கொடுக்கும் அளவுக்கும் முன்னேறி உள்ளார்.

மேலும் தன்னுடைய மகன் கொடுத்த ஊக்கத்தால், தன்னுடைய 25 வருட கனவான கல்லூரி படிப்பையும் எட்டிப் பிடித்துள்ளார். பாக்கியா கல்லூரியில் சேர்ந்தது அவரின் மகள் இனியாவுக்கும், முன்னாள் கணவரான கோபிக்கும் மட்டுமே பிடிக்காத நிலையில், மற்ற அனைவருமே இவர் கல்லூரிக்கு சென்று படிக்க பச்சைக்கொடி காட்டி விட்டனர்.

பள்ளி மாணவியாக மாறிய பிக்பாஸ் ஜனனி..! ஸ்கர்ட் அண்ட் ஷர்ட்டில் நடத்திய வேற லெவல் போட்டோ ஷூட்!

Tap to resize

கோபி - ராதிகா கொடுக்கும் இடஞ்சல்களை சமாளித்து பாக்யா தன்னுடைய அடுத்தடுத்த வெற்றிப் படிகளை எடுத்து வைத்து வரும் நிலையில், தற்போது இந்த சீரியலில் புதிய திருப்பமாக பழனிச்சாமிடம் அவரின் அம்மா, உனக்கு பாக்யாவை பிடிக்கும் என்றால் அவரை பெண் கேட்டு அவங்க வீட்டுக்கு போகலாமா என கேட்கிறார்.

இதைக் கேட்டு அதிர்ச்சியான பழனிச்சாமி, அப்படியெல்லாம் ஒரு நாள் கூட செஞ்சுராதீங்க. நாங்க நண்பர்கள்.அப்படியே இருந்துட்டு போகிறோம் என சொல்கிறார். எனினும் ஏற்கனவே பழனிச்சாமி பாக்யாவிடம் பேசுவதால் பொங்கிக் கொண்டிருக்கும் கோபிக்கு மட்டும் இந்த விஷயம் தெரிய வந்தால், பாவம் நெஞ்சே வெடிச்சிடும் என நெட்டிசன்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர். ஒருவேளை பழனிச்சாமி சொல்வதை மீறி பாக்கியாவை பெண் கேட்டு அவரின் அம்மா... பாக்கியா வீட்டுக்கு சென்றால், எந்த மாதிரியான விளைவுகள் வரும் என்பதையும் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

Dhanush: இந்த நடிகை தான் வேண்டும்!அடம்பிடித்து தளபதி நாயகியை கமிட் செய்த தனுஷ்! வாரி வழங்கப்படுகிறதா சம்பளம்?

Latest Videos

click me!