அதே போல் ரசிகர்கள் எதிர்பார்த்தது போல் இன்றைய தினம், எழில் - ஆர்த்தியின் திருமண எபிசோட் கிளைமேக்ஸை எட்டி உள்ளது. எழில் பக்காவாக பிளான் போட்டு, எக்சிகியூட் செய்துள்ளார். அதன்படி இன்று வெளியாகியுள்ள புரோமோவில், எழிலின் தந்தை, அனைவரது கவனத்தையும் திசை திருப்ப... கயலின் பெரியப்பா தர்மலிங்கத்திடம் பிரச்சனை செய்வது போல் நடிக்க, ஆர்த்தியும் சுயநினைவை இழந்த நிலையில் மணமேடையில் அமர்ந்துள்ளார். இதனை கச்சிதமாக பயன்படுத்தி கொண்டு, எழிலின் நண்பன் ஆனந்த் ஆர்த்தி கழுத்தில் தாலி கட்டுகிறார்.