பாண்டியன் ஸ்டோர்ஸ் முடிவடைகிறதா? ஹேமா போட்ட ஒற்றை பதிவால்... குழம்பி போன ரசிகர்கள்!

First Published | Aug 17, 2023, 7:52 PM IST

'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் குறித்து, அந்த சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஹேமா ராஜ்குமார் இன்ஸ்டாகிராமில் போட்டுள்ள பதிவு ரசிகர்களை குழப்பமடைய செய்துள்ளது.
 

பொதுவாக சீரியல்கள், ஒரு குடும்பத்தை சுற்றி இருக்கும், பாசம், உறவு, சண்டை, பிரச்சனை, துரோகம் போன்ற சம்பவங்களை வைத்தே எடுக்கப்பட்டு வருகிறது. இவற்றில் கொஞ்சம் வித்தியாசமான கதைகளத்தில் எடுக்கப்படும் சீரியல்களுக்கு,  இல்லத்தரசிகள் மட்டும் இன்றி இளைஞர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.

அதேபோல் பெண் கதாபாத்திரத்தை பலமாக வைத்து எடுக்கப்படும் சீரியல்களுக்கும் சமீப காலமாக ரசிகர்கள் தங்களின் வரவேற்பை தெரிவித்து வருகிறார்கள். எனவே இப்படிப்பட்ட கதைக்களத்துடன் எடுக்கப்படும் சீரியல்களும் அதிகரித்து வருகிறது. 

ஆனந்த யாழை மீட்டுகிறாய்... அப்பா ஷங்கருடன் கொஞ்சி விளையாடிய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட அதிதி ஷங்கர்!

Tap to resize

அந்த வகையில் கிட்டதட்ட 'வானத்தைப்போல' படத்தை ரசிகர்களுக்கு நினைவூட்டும் வகையில் அண்ணன்- தம்பி பாசத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டு வரும் சீரியல் பாண்டியன் ஸ்டோர்ஸ். தம்பிகளை நன்றாக வளர்க்க வேண்டும் என்பதற்காக குழந்தை பெற்று கொள்ள வேண்டாம் என முடிவு செய்யும் அண்ணன்  - அண்ணி, மாமியார் மற்றும் கொழுந்தன் மார்களை அக்கறையோடு பார்த்து கொள்ளும் மருமகள் என இந்த சீரியல் மிகவும் பாசிட்டிவான கதைக்களத்தில் ஒளிபரப்பாகி வந்தது. அந்த சமயத்தில் 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் டாப் 5 TRP- லிஸ்டிலும் இடம்பிடித்தது. 

ஆனால் அன்பான அண்ணன் - தம்பிகளுக்கு இடையே பிரச்சனை துளிர் விட துவங்கிய பின்னர்... இந்த சீரியலின் TRP -யும்அடிவாங்கியது . அண்ணன் - தம்பிகள் இடையே பிரச்சனை வந்து, சில நாட்கள் பிரிந்து வாழ்ந்தாலும், பின்னர் ஏதேனும் காரணங்களால் ஒன்று கூடி விடுவார்கள். இதுவே இவர்களின் மிகப்பெரிய பலம் என கூறலாம்.

கோமாவில் இருந்து கண் விழித்த அப்பத்தா.! கோவத்தில் வார்த்தையை விட்ட குணசேகரன்... நோஸ் கட் செய்த ரேணுகா!

கடந்த ஓரிரு மாதமாக, ஏன் இந்த சீரியலில் இப்படி பட்ட காட்சிகள் எல்லாம் இடம்பெறுகிறது என ரசிகர்கள் நினைக்கும் விதத்தில்... கொண்டு செல்லப்படுகிறது. அங்கு சுற்றி ... இங்கு சுற்றி தற்போது தனத்தின் கேன்சர் ட்ரீட்மென்டில் வந்து நிற்கிறது. ஒரு வழியாக தனத்தின் ஆபரேஷன் வெற்றிகரமாக முடிவடைந்து விட்ட நிலையில், இதுகுறித்து அரசல் புரசலாக கதிருக்கு மட்டுமே தெரியவந்துள்ளது மற்றவர்களுக்கும் விரைவில் தெரிய வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் போரடிக்கும் காட்சிகளுடன் ஒளிபரப்பாக வருவதால்... விரைவில் இந்த சீரியல் முடிவடைய உள்ளதாக கூறப்பட்டது. இந்நிலையில் இந்த சீரியலை மீனா கதாபாத்திரத்தில் நடித்து வரும், ஹேமா ராஜ்குமார்... "பாண்டியன் ஸ்டோர் சீரியல் முடிய போகிறதா? என கேள்வி எழுப்பியுள்ளார்". இதை பார்த்து ரசிகர்கள், இந்த கேள்வியை நாங்கள் உங்களிடம் கேட்க வேண்டும்... நீங்கள் எங்களிடம் கேள்வி கேட்கிறீர்களே என கமெண்ட் தெரிவித்து வருகிறார்கள். மேலும் இந்த கேள்வி பல ரசிகர்களை குழப்படைய வைத்துள்ளது.

'ரோமியோ' படத்தின் மூலம் ரொமான்டிக் ஹீரோவாக மாறிய விஜய் ஆண்டோனி! இவரின் ஜூலியட் யார் தெரியுமா?

Latest Videos

click me!