விஜய் டிவி சீரியல்களில் டாப் 10 TRP ரேட்டிங்கை கைப்பற்றிய சீரியல்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது!

First Published | Aug 18, 2023, 7:11 PM IST

விஜய் டிவி சீரியல்களில் டாப் 10 TRP ரேட்டிங்கை கைப்பற்றிய சீரியல்கள் பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
 

ஒவ்வொரு வாரமும் சீரியல்களின் TRP ரேட்டிங் வெளியாகி வருகிறது. ரசிகர்களும் எந்த தொடர் அதிகம் பார்க்க படுகிறது என்பதை தெரிந்து கொள்ள அதிக ஆர்வம் காட்டி வருகிறார்கள். அந்த வகையில் இந்த வாரம் விஜய் டிவி சீரியலில் டாப் 10 TRP பட்டியலில் இடம்பிடித்த தொடர்கள் பற்றி தெரிந்து கொள்வோம்.
 

இந்த வாரம் அதிக TRP ரேட்டிங்கை கைப்பற்றி முதலிடத்தில் உள்ளது 'சிறகடிக்க ஆசை' சீரியல். சமீபத்தில் துவங்கப்பட்ட இந்த சீரியல், தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதன்படி இந்த வாரம் 6.98 புள்ளிகளை பெற்றுள்ளது.

பள்ளியில் நடந்த கல்ச்சுரல் விழாவில் கலந்து கொண்ட ஜெயம் ரவி - லோகேஷ் கனகராஜ்! வைரல் போட்டோஸ்!

Tap to resize

தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து கொண்டிருந்த 'பாக்கியலட்சுமி' சீரியல் கடந்த இரண்டு வாரங்களாக, இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. அதன்படி தற்போது 6.92 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
 

மூன்றாவது இடத்தை 'பாண்டியன் ஸ்டோர்' சீரியல் பிடித்துள்ளது. விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக கூறப்படும் இந்த சீரியல், இந்த வாரம்  5.84 புள்ளிகளை பெற்றுள்ளது.

விபத்தில் சிக்கிய விஜய் டிவி சீரியல் நடிகை..! சீட் பெல்ட் போட்டதால் தப்பித்தேன்! காயங்களுடன் வெளியிட்ட வீடியோ!

சமீபத்தில் துவங்கப்பட்ட 'ஆஹா கல்யாணம்'  சீரியல், விஜய் டிவி தொடர்களின் TRP லிஸ்டில் 4.88 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. எதிர்பாராமல் அரங்கேறி வரும் ட்விஸ்ட் தான் இந்த சீரியலின் வரவேற்புக்கு காரணம்.

இந்த வாரம், 'ஈரமான ரோஜாவே' தொடர் 4.09 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தை பிடித்துள்ளது. ரோலர் கோஸ்டர் எமோஷனுடன் ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலில், பிரியா - ஜீவா ஒன்று சேர்ந்து விட்ட நிலையில், காவியா - பார்த்திபன் மீண்டும் சேர்ந்து வாழ்வார்களா? என்பது மிகப்பெரிய கேள்வியாகி உள்ளது.

எத்தனை கிரிமினல் கூடத்தான் வாழறது! ஜீவனந்தத்தை தீர்த்து கட்ட ஆளை அனுப்பிட்டு அலப்பறை பண்ணும் குணசேகரன்!

எதிர்பாராத திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் 'மகாநதி' சீரியல், இந்த வாரம்  4.04 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த சில வரங்களை விட, இந்த சீரியல் TRP -யில் கொஞ்சம் பின்தங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.

மோதலும் - காதலும், கல்யாணம் முதல் காதல் வரை சீரியலின் மறுஉருவாக்கமாக ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு, கடந்த முறை இருந்ததை விட, வரவேற்பு குறைந்துள்ளது. இந்த வாரம் இந்த சீரியல்  3.38 புலிகளுடன் 7-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

ஏ.ஆர்.ரகுமான் பக்கத்தில் படுக்க மாட்டேன் என கூறிய மனைவி! கப்பு சிப்புனு கட் செய்த இசைப்புயல்!

ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வந்த 'தமிழும் சரஸ்வதியும்' சீரியல் கொஞ்சம் டல் அடிக்க துவங்கியுள்ளது. இந்த வாரம் 3.36 புள்ளிகளுடன் 8-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

அடுத்தடுத்து என்ன நடக்கும் என்கிற ஆர்வத்தை தூண்டும் விதத்தில் 'செல்லம்மா' சீரியல் ஒளிபரப்பாகி வந்தாலும், TRP-யில் மிகவும் பின்தங்கி விட்டது. இந்த வாரம் 2.92 புள்ளிகளுடன் 9-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

ஆனந்த யாழை மீட்டுகிறாய்... அப்பா ஷங்கருடன் கொஞ்சி விளையாடிய லேட்டஸ்ட் புகைப்படத்தை வெளியிட்ட அதிதி ஷங்கர்!

10-ஆவது இடத்தில் இரண்டு விஜய் டிவி தொடர்கள் உள்ளது. அந்த வகையில் கிழக்கு வாசல் மற்றும் தென்றல் வந்து என்னை தொடும் ஆகிய இரண்டு தொடர்களுமே... 2.91 புள்ளிகளை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
 

Latest Videos

click me!