மேலும் அப்பத்தா தற்போது கோமாவில் இருந்து கண் முழுத்து விட்டதால், அவரிடம் இருந்து எப்படியும் மிரட்டி உருட்டி... கையெழுத்து வாங்கி, அதை வைத்து ஜீவானந்தத்திடமிருந்து சொத்துக்களை மீட்டு விடலாம் என குணசேகரன் கணக்கு போட்டார். ஆனால் அதுவும் தற்போது தப்புக்கணக்காகிவிட்டது. குணசேகரனால் வீட்டிற்குள் ஹவுஸ் அரெஸ்ட் செய்யப்பட்ட அப்பத்தா எப்படியோ வீட்டில் இருந்து வெளியேறி நீதிபதியை சந்திப்பது குறித்த காட்சிகள் தான் இன்றைய புரோமோவில் இடம் பெற்றுள்ளது.