அதே போல் ஜீவானந்தத்திற்கு தன்னுடைய சொத்துக்களை எழுதிக் கொடுத்தது நான் தான் என கூறுகிறார். பின்னர் அந்த இடத்திற்கு வரும் குணசேகரன்... அப்பத்தா, ஜீவானந்தம், ஜனனி, ஆகிய மூவரையும் ஒரே இடத்தில் பார்த்ததால் கடும் கோபத்திற்கு ஆளாகிறார். அப்போது அப்பத்தா செம்ம கெத்தாக, "ஏய் குணசேகரா நிறுத்து என கூறி, இந்த கேசை ரீஇன்வெஸ்டிகேட் பண்ண நீதிபதியிடம் கூறியுள்ளதாக தெரிவிக்கிறார். இனிமேல் நீ ஒன்னும் பண்ண முடியாது என பழைய ஃபாமில் அப்பத்தா கூறிய ஸ்டைல் வேற ரகம்.