தேவயானி, ஆல்யா மானசா, என கர்ப்பமாக இருக்கும் போது கூட சீரியலில் நடித்த பிரபலங்கள்! யார் யார் தெரியுமா?

First Published | Aug 26, 2023, 3:47 PM IST

கர்ப்பமாக இருக்கும் சமயத்தில் கூட, சில நடிகைகள் அவர்கள் நடித்து வரும் கதாபாத்திரத்தில் இருந்து விலக மனம் இல்லாமல் தொடர்ந்து நடிக்கின்றனர். அப்படி நடித்த சில நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
 

வெள்ளித்திரைக்கும்  - சின்னத்திரைக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் உள்ளன. குறிப்பாக திரைப்படங்களில் நடிக்க வேண்டிய காட்சியில் நடித்து முடித்துவிட்டு அவர்கள் கிளம்பி விடலாம். அதே போல் ஷூட்டிங்கும் சரியாக 5 மணிக்கு பேக்அப் ஆகி விடும். 
 

ஆனால் சின்னத்திரை என்பது முற்றிலும் மாறுபட்டது. காலை 6 மணிக்கு ஷூட்டிங் சென்றார்கள் என்றால், ஒரு நாள் முழுவதும் அவர்களின் காட்சி எடுக்கப்படும் வரை காத்திருக்க வேண்டும். இரவு 9 அல்லது 10 மணிக்கு தான் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து கிளம்ப முடியும். அவர்களின் காட்சி எடுக்கப்பட வில்லை என்றாலும், ஸ்பாட்டில் அவர்கள் இருந்தே ஆக வேண்டும் என்கிற சில விதிமுறைகளும் சின்னத்திரையை சேர்ந்தவர்களுக்கு உள்ளது.

Biggboss 7: 'பிக்பாஸ் சீசன் 7 'நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறாரா விஜய் பட நடிகை? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

Tap to resize

இதுபோன்ற சூழலில் நார்மலாக இருப்பவர்கள் கூட, மிகவும் களைத்து போய் விடுவார்கள். அதிலும் கர்ப்பமாக இருந்தால் சொல்லவா வேண்டும். இப்படி பல்வேறு கஷ்டங்களை கடந்து தான், சில பிரபலங்கள் கர்ப்பமாக இருக்கும் போது கூட... தங்களுடைய சூழ்நிலைக்காகவும், கதாபாத்திரத்தின் தன்மை அறிந்தும் நடிக்கிறார்கள். அந்த வகையில் கர்ப்பமாக இருக்கும் போதும் கூட, ஓய்வில்லாமல் நடித்த மற்றும் நடித்து வரும் சில நடிகைகள் பற்றி இந்த தொகுப்பில் காணலாம். 

தேவயானி:

தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகியாக இருந்து, பின்னர் சின்னத்திரையிலும் கலக்கி வருபவர் தேவயானி. இவர் கோலங்கள் தொடரில் நடித்து வரும் போது, இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இந்த சீரியலின் முக்கியத்துவம் அறிந்தும், ரசிகர்களுக்காகவும் தேவயானி தொடர்ந்து சீரியலில் நடித்தார்.

Sundari Season 2: சுந்தரி சீசன் 2 சீரியலில் என்ட்ரி கொடுக்கும் புதிய ஹீரோ! யார் தெரியுமா? வெளியான தகவல்..!

ஆலியா மானசா:

நடிகை ஆலியா மானசா, ராஜா - ராணி தொடரில் நடித்த போது அந்த சீரியலில் நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணமான உடனேயே கர்ப்பமானதால் சீரியலில் இருந்து விலகினார். இதை தொடர்ந்து, மகள் ஐலாவுக்கு ஒரு வயது ஆன பின்னர் மீண்டும் 'ராஜா ராணி' 2 தொடரில் நடிக்க கமிட் ஆனார். இரண்டாவது முறையாக கர்ப்பமான ஆல்யா 8 மாதம் வரை சீரியலில் நடித்து வந்த நிலையில், பின்னர் சில நாட்கள் ஓய்வு எடுக்கவேண்டிய கட்டாயத்தின் காரணமாக சீரியலில் இருந்து விலகினார்.

குடும்பமே டார்ச்சர் செய்தது! செல்வராகவனை விவாகரத்து செய்ய இது தான் காரணம்! உண்மையை உடைத்த சோனியா அகர்வால்!

திவ்யா ஸ்ரீதர:

சீரியல் நடிகர் அர்னவ் என்பவரை காதலித்து, திருமணம் செய்து கொண்டபின்னர்... வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு வைத்து கொண்டு தன்னை அர்னவ் கொடுமை படுத்துவதாக பரபரப்பை ஏற்படுத்தியவர் 'செவ்வந்தி' சீரியல் நடிகை திவ்யா. இவர் தன்னுடைய சூழ்நிலை காரணமாக குழந்தை பெற்று கொள்ளும் வரை சீரியலில் தொடர்ந்து நடித்து வந்தது மட்டும் இன்றி, குழந்தை பிறந்த ஓரிரு வாரத்தில் மீண்டும் சீரியலில் நடிக்க துவங்கினார்.

ஃபரினா:

பாரதி கண்ணம்மா சீரியலில் முரட்டு வில்லி கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான ஃபரினா... திருமணம் ஆகி பல வருடங்களுக்கு பின்னர் கர்ப்பமான நிலையில், இந்த சீரியலில் இவருக்கு இருந்த வரவேற்பின் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகாமல் குழந்தை பிறந்த பின்பும் தொடர்ந்து இந்த சீரியலில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதுல லட்சுமி யார்? பட்டு புடவையில் தெய்வீக கலையுடன் ஸ்ரீதேவி வெளியிட்ட வரலட்சுமி பூஜை போட்டோஸ்..!

ஹேமா ராஜ்குமார்:

பாண்டியன் ஸ்டோர் சீரியலில் நடித்து வந்த ஹேமா ராஜ்குமார், சீரியலில் கர்ப்பமாக இருக்கும் நேரத்தில்... நிஜமாகவே கர்ப்பமானார். கர்ப்பமாக இருக்கும் வரை தொடர்ந்து சீரியலில் நடித்து வந்த இவர்... குழந்தை பிறந்த பின்னரும் தொடர்ந்து சீரியலில் பிரேக் எடுக்காமல் நடித்து வருகிறார்.
 

அபி நவ்யா:

கயல் சீரியலில், ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வரும் அபி நவ்யாவுக்கு சமீபத்தில் தான் குழந்தை பிறந்தது. கயல் சீரியலில் நடித்து கொண்டிருக்கும் போதே இவர் கர்ப்பமான நிலையில், இவர் பிரேக் எடுத்த காட்சிகளை அவர் ட்ரைனிங் செல்வது போல் கூறி சாமர்த்தியமாக சமாளித்தனர். குழந்தை பிறந்த பின்னர் தற்போது மீண்டும் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகர் விஜய் குமார் பேத்திக்கு நடந்து முடிந்த நிச்சயதார்த்தம்! மாப்பிள்ளை யார் தெரியுமா? வைரலாகும் போட்டோஸ்!
 

காயத்ரி யுவராஜ்:

தற்போது மீனாட்சி பொண்ணுங்க சீரியலில் நடித்து வரும், காயத்ரி யுவராஜ் கர்ப்பமாக உள்ள நிலையிலும்... தொடர்ந்து நடித்து வருகிறார். சமீபத்தில் இவருக்கு இவரின் கணவர் வளைகாப்பு செய்து அழகு பார்த்தார். ஏற்கனவே 12 வயதில் ஒரு மகன் உள்ள நிலையில் இது, இவருக்கு இரண்டாவது குழந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Videos

click me!