தலை நிறைய மல்லிப்பூ இருக்கு... தாவணிய எங்கம்மா! யாஷிகாவின் கவர்ச்சியை கலாய்க்கும் நெட்டிசன்கள்
தலை நிறைய மல்லிப்பூ வைத்து தாவணி அணியாமல் கவர்ச்சியாக போட்டோஷூட் நடத்தியுள்ள நடிகை யாஷிகாவை நெட்டிசன்கள் ட்ரோல் செய்து வருகின்றனர்.
Yashika
டெல்லியில் பிறந்த யாஷிகா, பின்னர் குடும்பத்துடன் சென்னையில் செட்டில் ஆனார். பள்ளியில் படிக்கும்போதே மாடலிங் மீது ஆர்வம் கொண்டிருந்த யாஷிகா, ஸ்கூல் படிக்கும்போதே படங்களிலும் நடிக்கத் தொடங்கினார். தமிழில் இவர் முதன்முதலில் நடித்த திரைப்படம் இனிமே இப்படித்தான். ஆனால் அப்படத்தில் அவர் நடித்த காட்சிகளை கத்திரி போட்டு தூக்கிவிட்டனர். இதையடுத்து நடிகர் ஜீவாவின் கவலை வேண்டாம் படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்தார். அதனால் அப்படம் தான் அவரின் முதல் படமாகவும் அமைந்தது.
Yashika aannand
இதையடுத்து கார்த்திக் நரேன் இயக்கிய துருவங்கள் பதினாறு, பாடம் மற்றும் மணியார் குடும்பம் போன்ற திரைப்படங்களில் நடித்தாலும், இவரை பேமஸ் ஆக்கியது இருட்டு அறையில் முரட்டுக் குத்து திரைப்படம் தான். சந்தோஷ் ஜெயக்குமார் இயக்கிய இப்படத்தில் படு கவர்ச்சியாக நடித்து அதிர்ச்சி கொடுத்தார். இதையடுத்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் கலந்துகொள்ளும் வாய்ப்பு வந்ததும் பிக்பாஸ் இரண்டாவது சீசனில் போட்டியாளராக களமிறங்கி கலக்கினார் யாஷிகா.
இதையும் படியுங்கள்... உதயநிதியுடன் சேர்ந்து அரசியலிலும் கலக்க வருகிறாரா சந்தானம்? கிக் பட விழா மூலம் வெளிவந்த உண்மை
Yashika photoshoot
இதையடுத்து யாஷிகாவுக்கு பட வாய்ப்புகள் குவிந்ததால் செம்ம பிசியாக நடித்து வந்தார். இந்த நிலையில், கடந்த 2021-ம் ஆண்டு நடிகை யாஷிகா சென்ற கார் விபத்தில் சிக்கியது. இதில் அவரது தோழி பாவனி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். யாஷிகா படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் 6 மாதங்கள் படுத்த படுக்கையாகவே இருந்த யாஷிகா, அதிலிருந்து முழுமையாக குணமாகி வரவே ஓராண்டுக்கு மேல் ஆனது.
Yashika hot photos
தற்போது முழுமையாக குணமடைந்து மீண்டும் சினிமாவில் பிசியாகி உள்ள நடிகை யாஷிகா, சோசியல் மீடியாவில் விதவிதமாக கவர்ச்சி புகைப்படங்களையும் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் தற்போது பாவடை மற்றும் ஜாக்கெட் அணிந்து தலைநிறைய மல்லிப்பூ வைத்தபடி போஸ் கொடுத்துள்ள கவர்ச்சி புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். இதைப்பார்த்த நெட்டிசன்கள் தலைநிறைய மல்லிப்பூ வச்சிட்டு தாவணி போட மறந்துட்டியே மா என கிண்டலடித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு... காதல் மனைவியுடன் ஜாலியாக சைக்கிளிங் சென்ற அஜித் - வைரலாகும் போட்டோஸ்