ஒருபுறம் ஜனனி இறந்து போன ஜீவானந்தத்தின் மனைவியின் கொலைக்கு நிச்சயம் நியாயம் கிடைக்க வேண்டும் என ஆதங்கப்படுவது போல் சக்தியிடம் பேச, இந்த கொலைக்கு பின்னணியில் உள்ள குணசேகரன் மற்றும் கதிரை ஈஸ்வரியும், நந்தினியும் வெறுக்க துவங்கிவிட்டனர். ஏற்னவே கணவன் குணசேகரனை விரோதிபோல் பார்த்துக்கொண்டிருக்கும் ஈஸ்வரி, தற்போது ஜனனி, ரேணுகா, நந்தினி ஆகியோருடன் சென்று ஜீவனந்தத்தை சந்திக்க தயாராகியுள்ளார்.