TRP ரேட்டிங்கில் 'கயல்' சீரியலை ஓரம் கட்டிய 'எதிர்நீச்சல்'! சன் டிவியின் டாப் 5 சீரியல்களின் முழு விவரம்!

Published : Aug 31, 2023, 07:36 PM IST

சன் டிவி சீரியல்களில், டாப் 5 TRP-யை கைப்பற்றிய தொடர்கள் பற்றிய விவரம் தற்போது வெளியாகியுள்ளது.  

PREV
16
TRP ரேட்டிங்கில் 'கயல்' சீரியலை ஓரம் கட்டிய 'எதிர்நீச்சல்'! சன் டிவியின் டாப் 5 சீரியல்களின் முழு விவரம்!

இல்லத்தரசிகள் முதல் இளம் ரசிகர்கள் வரை, தினம் தோறும் பார்த்து ரசிக்கப்பட்டு வரும், சன் டிவி தொடரில், இந்த வருடத்தின் 34-ஆவது வாரத்தில், டாப் 5 ரேட்டிங்கை கைப்பற்றிய சன் டிவி தொடர்கள் பற்றிய விவரங்களை இந்த தொகுப்பின் மூலம் பார்க்கலாம்.
 

26

எதிர்நீச்சல்:

கடந்த சில வாரங்களாக, கயல் சீரியலே தொடர்ந்து முதல் இடத்தை தக்க வைத்து வந்த நிலையில், இந்த முறை கயல் சீரியலை பின்னுக்கு தள்ளி 'எதிர்நீச்சல்' சீரியல் முதல் இடத்தை கைப்பற்றியுள்ளது. அப்பத்தாவின் வாக்குமூலம், ஜீவானந்தம் மனைவியின் மரணம், ஈஸ்வரி - ஜீவானந்தம் சந்திப்பு என இந்த தொடர் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருவதால்... இந்த வாரம் 11.45 புள்ளிகளுடன் முதல் இடத்தை பிடித்துள்ளது.

அமெரிக்க பிரபலத்தின் மனைவி உட்பட இன்ஸ்டாகிராமில் நயன்தாரா ஃபாலோ பண்ணும் 5 முக்கிய பிரபலங்கள் ?

36

கயல்:

இந்த வருடம், கடந்த வாரத்தை விட சற்று பின்தங்கி இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது 'கயல்' தொடர். எழிலின் திருமணத்திற்கு பின்னர், ஆனந்தி செய்த கொலையை மறைப்பதற்காக கயல் முயற்சி செய்து வரும் நிலையில், சற்று திரைக்கதையும் டல் அடித்துள்ளது. இதுதான் இந்த வாரம் கயல் தொடர் பின்தங்க காரணம் என கூறப்படுகிறது. அந்த வகையில், 11.39 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
 

46

சுந்தரி:

சுந்தரி தொடரின் முதல் அத்தியாயம் முடிவுக்கு வந்துள்ள நிலையில்... இரண்டாவது அத்தியாயம் தற்போது துவங்கியுளளது. சுந்தரி IAS அதிகாரியாக பதவி ஏற்றுவிட்டார். புதிய கதை களத்தில் பயணித்து வரும் இந்த தொடரில் நடிகர் கிருஷ்ணா ஹீரோவாக நடிக்கிறார். ஆரம்பத்திலேயே சுந்தரி - கிருஷ்ணா மோதலில் சந்தித்துக்கொள்ளும் நிலையில் இவர்கள் எப்படி வாழ்க்கையில் ஒன்று சேர்வார்கள் என்கிற கோணத்தில் இந்த தொடர் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வாரம் சுந்தரி தொடர் 9.97 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

Vignesh Shivan: 'ஜவான்' ட்ரைலரை பார்த்து மெர்சலான விக்கி..! மனைவி நயன்தாராவுக்கு கொடுத்த ஸ்பெஷல் மெசேஜ்!

56

வானத்தை போல:

ராஜ பாண்டியும் - துளசியும் மீண்டும் வாழ்க்கையில் ஒன்று சேர்வார்களா? என்கிற எதிர்பார்ப்புடன் ஒளிபரப்பாகி வரும் இந்த தொடர், இந்த வாரம் 9.83 புள்ளிகளுடன் நான்காவது இடத்தை கைப்பற்றியுள்ளது.
 

66

இனியா:

பொதுவாக மாமியார் தான் மருமகளிடம் பிரச்சனை செய்வார்கள். ஆனால் இனியா தொடரில்... மாமனார் தான் இனியாவுக்கு பிரச்சனை கொடுக்கும் நபர். அணைத்து பிரச்சனைகளையும், ஒருவழியாக சமாளித்து இனியா அக்காவுக்கு தன்னை பற்றி புரிய வைப்பாரா? என்கிற கோணத்தில் பரபரப்பான காட்சிகளுடன் ஒளிபரப்பாகி வரும் இனியா தொடர், இந்த வாரம் 9.42 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்தை கைப்பற்றியுள்ளது.

ஈஸ்வரியை பார்த்து வெண்பா சொன்ன வார்த்தை..! ஷாக்கான ஜீவானந்தம்... 'எதிர்நீச்சல்' சீரியலின் லேட்டஸ்ட் அப்டேட்!

click me!

Recommended Stories