திக்கு முக்காடும் திருச்சி.! ஆரம்பமே அமர்க்களம்- திமுகவிற்கு ஷாக் கொடுத்த விஜய்

Published : Sep 13, 2025, 10:45 AM ISTUpdated : Sep 13, 2025, 10:49 AM IST

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் பிரச்சார சுற்றுப்பயணத்தை விஜய் இன்று திருச்சியில் தொடங்குகிறார். விஜயின் இந்தப் பிரச்சாரம் 2026 தேர்தலில் புதிய அலை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

PREV
14
மக்களை சந்திக்கும் விஜய்

தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில்  அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தொடங்கியுள்ளது. அந்த வகையில் திமுக, அதிமுக, பாமக, தேமுதிகவை தொடர்ந்து தற்போது மக்களை சந்திக்க களத்தில் குதித்துள்ளார் விஜய், சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரச்சார சுற்றுப்பயணத்தை இன்று (செப்டம்பர் 13, 2025) திருச்சியில் தொடங்குகிறார். 

தமிழக அரசியலில் திராவிடக் கட்சிகளுக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் முக்கிய இடமாகக் திருச்சி கருதப்படுகிறது. அந்த வகையில் விஜயின் இந்தப் பயணம் இன்று திருச்சியில் தொடங்கி  தமிழகம் முழுவதும் 3 மாதங்களுக்கும் மேல் நீடித்து, டிசம்பர் 20 அன்று மதுரையில் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

24
திருச்சியில் பிரச்சாரத்தை தொடங்கும் விஜய்

திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை அருகே காலை 10:35 மணிக்கு விஜய் பொதுமக்கள் மத்தியில் பேசவுள்ளார். அங்கிருந்து ஸ்ரீரங்கம் வழியாக பிரச்சாரம் தொடரும். முதல் நாளில் திருச்சி மேற்கு மற்றும் கிழக்கு சட்டமன்றத் தொகுதிகளில் 4 இடங்களில் மக்களைச் சந்திக்கிறார். "

வாகை சூடும் வரலாறு திரும்புகிறது; உங்க விஜய் நான் வரேன்" என்ற முழக்கத்துடன்,  தமிழகத்தின் 38 மாவட்டங்களில் பயணிக்கும் வகையில்  திட்டமிடப்பட்டுள்ளது.

34
அரசியலில் திருப்பதை தருமா விஜய் பிரச்சாரம்

திருச்சி, பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கவனத்தை ஈர்க்கும். விஜயின் ரசிகர்கள் மற்றும் ஆதரவாளர்கள் பெரிய அளவில் கலந்து கொள்ளவுள்ளனர். த.வெ.க-வின் இந்தப் பயணம், 2026 தேர்தலில் புதிய அலை உருவாக்கும் என அரசியல் களத்தில் பேசப்படுகிறது. இந்த நிலையில் சென்னையில் இருந்து திருச்சி வந்த விஜய்க்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

 விமான நிலையத்தில் இருந்து விஜய்யின் பேருந்து வெளியே வர முடியாத வகையில் தொண்டர்களின் கூடினர். தொண்டர்கள் வெள்ளத்தில் நீந்தி வந்த பிரச்சார பேருந்து மெது மெதுவாக திருச்சி காந்தி மார்க்கெட் காவல் சரகம் மரக்கடை எம்.ஜி.ஆர். சிலை வரை மெது மெதுவாக சென்றது.

44
திக்கு முக்காடி போன திருச்சி

வழி முழுவதும் பல ஆயிரம் தொண்டர்கள் கூடி நின்று விஜய்யை உற்சாகமாக வரவேற்றனர். விஜய்யின் திருச்சி பயணத்தால் திருச்சி நகரமே திருவிழா கோலம் பூண்டுள்ளது. பல இடங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நீண்ட தூரத்திற்கு வாகனங்கள் வரிசையில் காத்திருந்தது. விஜய்க்கு திருச்சியில் தவெக தொண்டர்கள் கொடுத்த வரவேற்பால் ஆளுங்கட்சியான திமுக திக்குமுக்காடியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories