இந்த புகாரை அடுத்து வழக்குப்பதிவு செய்து தனிப்படை அமைத்து தீவிர விசாரணையில் மேற்கொள்ளப்பட்டது. மேலும், சம்பவம் நடந்தபோது அந்த வழியாக வந்தவர்கள் யார், யார் என்று போலீசார் தீவிரமாக விசாரித்தனர். அப்போது ஒரு சிறுவனும், ஒரு பெண்ணும் அப்பகுதியில் நடமாடியது தெரியவந்தது. இதையடுத்து 12-ம் வகுப்பு படித்து வரும் அந்த சிறுவனை பிடித்த போலீசார் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது அதே பகுதியை சேர்ந்த ராஜேஸ்வரி (33) என்பவர் அய்யம்மாளிடம் இருந்து சங்கிலியை பறித்து சென்றதும், அவர் கரூருக்கு சென்று தலைமறைவாகி இருப்பதும் தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார் ராஜேஸ்வரியை பிடித்து வந்து தீவிர விசாரணை நடத்தினர்.